முத்தெய்வதம்
- இரவி, மதி, எரி என்பன. அகரம் விரிந்து கணவன்
என்றாயது. ந : சிறப்புப் பொருள் தரும் இடைச்சொல்; நப்பின்னை, நக்கீரன்
என்பவற்றிற்போல கணவனும் மனைவியுமாய் இருந்தமைக் கேற்ப நங்கை
யொடும் . . . ஏறினன் என்றார்; காஞ்சன மாலை உமையுரு வெய்தி
னமையால் நங்கையொடு மென்றார் எனவும் கூறுப. ஆல் : அசை. (22)
தேமா ரியெனும்
படிசிந் தநறும்
பூமா ரிபொழிந் ததுபொன் னுலகந்
தூமா மறையந் தரதுந் துபிகார்
ஆமா மெனவெங் குமதிர்ந் தனவால். |
(இ
- ள்.) மாரி என்னும்படி - (மண்ணுலகில்) மழை என்று
சொல்லுமாறு, பொன் உலகம் - பொன்னுலகத்தார், தேம் சிந்தநறும் பூமாரி
பொழிந்தது - தேன் பொழிய நறிய பூமழை பொழந்தனர்; தூமா மறை அந்தர
துந்துபி - தூய பெரிய மறைகளும் தேவ துந்துபிகளும், கார் ஆம் ஆம் -
மேக முழக்கமாம் மேக முழக்கமாம் என்று சொல்லுமாறு, எங்கும் அதிர்ந்தன
- எங்கும் ஒலித்தன எ - று. தேம் சிந்த எனக் கூட்டுக. தேமாரி - இனிய
மாரி என்னலுமாம். எண்ணும்மைகள் தொக்கன. அடுக்கு துணிவின்கண்
வந்தது. ஆல் : அசை. (23)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
எழுந்தது
விமானம் வான மெழுந்ததுந் துபியு நாணி
விழுந்தது போலு மென்ன வரவொலி யெங்கும் விம்மத்
தொழுந்தகை முனிவ ரேத்தச் சுராதிகள்* பரவத் திங்கட்
கொழுந்தணி வேணிக் கூத்தர் கோநகர் குறித்துச் செல்வார். |
(இ
- ள்.) விமானம் எழுந்தது - அத்திப்பிய விமானம் மேலே
எழுந்தது; வானம் எழுந்த துந்துபியும் நாணி விழுந்தது போலும் என்ன
- வானின்கண் எழுந்த தேவ துந்துபிகளின் ஒலியும் நாணித் தோற்றதுபோலு
மென்று கூறுமாறு, அர ஒலி எங்கும் விம்ம - அரகரவென்னும் முழக்கம்
எங்கும் பரவவும், தொழும் தகை முனிவர் ஏத்த - எவரும் வணங்கும்
தகுதியையுடைய முனிவர்கள் வாழ்த்தவும், சுர ஆதிகள் பரவ - தேவர்
முதலியோர் துதிக்கவும், திங்கள்கொழுந்து அணி வேணிக் கூத்தர் - மதியின்
கொழுந்தினை அணிந்த சடையையுடைய கூத்தப் பெருமானது, கோநகர்
குறித்துச் செல்வார் - தலை நகரினை (சிவலோகத்தை) நோக்கிச்
செல்வாராயினர் எ - று.
நாணி
நிலத்தில் விழுந்தது போலும் என்று உரைப்ப. இளம் பிறையை
மதியின் கொழுந்தென்றார். கோ - தலைமை; சிறப்புமாம். (24)
முன்புதம்
முருவாய் வைய முறைபுரி கோல்கைக் கொண்டு
பின்புதன் னுருவந் தந்த மருகனும் பெருகு கேண்மை
அன்புதந் தருகு நின்ற தடாதகை யணங்கு மீண்டு
பொன்புனை குடுமிக் கோயில் புகுந்துநன் கிருப்பக் கண்டார். |
(பா
- ம்.) * சுராதிபதர்.
|