மையற் றழியா நிலத்திருவு
மரபுங் குடியும் புகழ்மையுநம்
ஐயற் கிசையத் தக்ககுலத்
தரசர் யாரென் றளக்கின்றார். |
(இ
- ள்.) வையைக் கிழவன் - வையை யாற்றுக் குரியனாகிய
சுந்தரபாண்டியன், தன் அருமைக் குமரன் தனக்கு - தன் அருமைப்
புதல்வனுக்கு, மணம் புணர்ச்சி செய்யக் கருதும் திறன் நோக்கி - திருமண
முடிக்கக் கருதிய தன்மையை நோக்கி, அமைச்சர் அறிஞரோடும் திரண்டு -
மந்திரிகள் மூதறிஞரோடும் கூடி, மை அற்று - குற்றமற்று, அழயா
நிலத்திருவும் - அழயாத நிலச் செல்வமும், மரபும் குடியும் புகழ்மையும் -
மரபும் குடிப்பிறப்பும் புகழும் ஆகிய இவற்றால், நம் ஐயற்கு இசையத் தக்க
குலத்து அரசர் - நம் இறைவனுக்குப் பொருந்தத் தக்க குலத்தினையுமுடைய
மன்னர், யார் என்று அளக்கின்றார் - யாவர் என்று ஆராய்கின்றார் எ - று.
நதிகளை
மகளிராக்கி அரசர்களை வையைக் கிழவன், காவிரிக்
கிழவன் என்றிங்ஙனம் கூறுதல் மரபு; "கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி" என்னும் ஆற்றுவரியுங் காண்க. அரச குமாரர்க்கு
மணம்புரிதல் முடிசூட்டுதல் முதலியவற்றை அமைச்சரும் நகரத்து
மாசனங்களும் உள்ளிட்டாருடன் கலந்து சூழ்ந்து முடிப்பது பண்டு
தொட்டுள்ள வழக்கமாகும். அற்று என்னும் வினையெச்சம் அழியா என்பதன்
விகுதி கொண்டு முடியும்; இசையத் தக்க என்பதனோடு இயைத்தலுமாம். மரபு
- திங்கள் மரபு, பரிதி மரபு என்றாற் போல்வன. ஆலுருபு விரித்துக் கொள்க.
அளத்தல் - அறிவான் ஒத்துப் பார்த்தல். (2)
தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய். |
(இ
- ள்.) (ஆராய்ந்த வழி எல்லா வகையாலும் ஒத்தவன்), தீந்தண்
புனல் சூழ் வட புலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு வேந்தன் - இனிய
தண்ணிய நீரால் சூழப்பட்ட வடக்கண் உள்ள கல்யாண புரம் என்னும்
அழகிய நகரத்துக்கு மன்னனாகிய, பரிதி திருமரபின் விளங்கும் சோம
சேகரன் என்று - சூரியனது திருக்குலத்தில் வந்து விளங்கா நின்ற
சோமசேகரனென்னும் அரசனாவான் என்று கருதி, ஆய்ந்த கேள்வி
அவனிடத்து - ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமாது
என்ன அவதரித்த காந்தி மதியை மணம் பேச இருந்தார் - திருமகளைப்
போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்;
அற்றைக் கனை இருள்வாய் - அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில்
எ - று.
|