13.
கடல்சுவற வேல்விட்ட படலம்
|
[கலிவிருத்தம்]
|
வளையொடு
செண்டுவேன் மைந்தற் கஞ்சுரும்
பளையவேம் பணிந்தகோ னளித்த வாறிதத்
தளையவிழ் தாரினான் றனயன் வேலைமேல்
இளையவ னென்னவே லெறிந்த தோதுவாம். |
(இ
- ள்.) அம் சுரும்பு அளைய வேம்பு அணிந்த கோன் - அழகிய
வண்டுகள் மூச வேப்ப மலர் மாலையை யணிந்த சுந்தரபாண்டியன்,
மைந்தற்கு - புதல்வனாகிய உக்கிர வழுதிக்கு, வளையொடு செண்டு வேல்
அளித்தவாறு இது - வளையும் செண்டும் வேலும் அளித்த திருவிளையாடல்
இதுவாம்; அத்தளை அவிழ் தாரினான் தனயன் - அந்த முறுக்கவிழ்ந்த மலர்
மாலையை யணிண்நத சுந்தரபாண்டியன் புதல்வனாகிய உக்கிரவழுதி, வேலை
மேல் இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம் - கடலின் மேல் முருகக்
கடவுளைப் போல் வேற் படையை விடுத்த திருவிளையாடலை (இனிக்)
கூறுவாம் எ - று.
கோன்
மைந்தற்கு அளித்தவாறு இது வென்க. அத்தளையவிழ்
தாரினான் தனயன் - அம்மைந்தன். இளையவன் - இளைய பிள்ளையாராகிய
முருகப்பிரான். அவன் சூரபன்மனாகிய மாவினைத் தடிதற்குக் கடலின்கண்
வேல் விடுத்ததுபோல் என விரித்துக்கொள்க. (1)
திங்களி னுக்கிரச் செழியன் வெண்குடை
எங்கணு நிழற்றவீற் றிருக்கு நாள்வயிற்
சங்கையில் லாதமா தரும வேள்விகள்
புங்கவர் புடைதழீஇப் போற்ற வாற்றுநாள். |
(இ
- ள்.) உக்கிரச் செழியன் - உக்கிர வழுதி, திங்களின் -
சந்திரன்போல, வெண்ழுடை எங்கணும் நிழற்ற வீற்றிருக்கும் நாள் வயின் -
தனது வெள்ளைக் குடையானது எங்கும் நிழல்செய்ய வீற்றிருக்கும் நாளில்,
சங்கை இல்லாத தருமம் வேள்விகள் - அளவில்லாத பெரிய தருமங்களையும்
வேள்விகளையும், புங்கவர் புடைதழீஇப் போற்ற - தேவர்கள் புறம்பே
சூழ்ந்து போற்ற, ஆற்றும் நாள் - செய்யும்பொழுது எ-று.
எங்கணும்
புவிமுழுதும். அரசு வீற்றிருக்கு நாளிலென்க. வயின் :
ஏழனுருபு. சங்கை - எண். மா உரிச்சொல்லாகலின் வலி யில்பாயிற்று. (2)
அரும்பரி
மகந்தொணூற் றாறு செய்துழிச்
சுரும்பரி பெரும்படைத் தோன்ற* றண்ணறா
விரும்பரி முரன்றுசூழ் வேம்பி னங்குழைப்
பொரும்பரி வீரன்மேற் பொறாது பொங்கினான். |
(பா
- ம்.) * சுரும்பரினிசைத்தருத் தோன்றல்.
|