"பொள்ளென வாங்கே
புறம் வேரார்" என்பது திருக்குறள். ஆல்
: அசை. (5)
விளைவது தெரிகிலேன்
வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய். |
(இ
- ள்.) வேலை வேந்தனும் விளைவது தெரிகிலன் -
கடற்கரசனாகிய வருணனும் மேலே விளைவதை உணராதவனாய், பேயும்
கண்படை கொளவரும் - பேயும் கண்ணுறங்குமாறு வருகின்ற, நனந்தலை
- நடு இரவின், குருட்டுக் கங்குல்வாய் - குருட்டிருளின்கண், வளவயல்
மதுரையை வளைந்திட்டு - வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப்
பதியைச் சூழ்ந்து, இம் மெனக் களைவது கருதினான் - விரைய அழித்தலைக்
கருதினான் எ - று.
விளைவது
- மேலே தனக்குண்டாகும் தீங்கு. தெரிகிலன் : முற்றெச்சம்.
வளைந்திட்டு, இடு : துணைவினை. இம்மென : விரைவுக் குறிப்பு. களைவது :
தொழிற் பெயர். நனந்தலை - நடு; நள்ளிரவுக் காயிற்று. பார்வையுடைய
விழகளைக் குருடு போலாக்கும் கங்குலைக் குருட்டுக் கங்குல் என்றார். (6)
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
கொதித்த
லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து* மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே. |
(இ
- ள்.) உததி - கடலானது, கொதித்து - பொங்கி, அலைக்கரங்கள்
- அலையாகிய கைகள், அண்ட கூடம் எங்கும் ஊடுபோய் - அண்டகூட
முழுதும் ஊடுருவிச் சென்று, அதிர்த்து அலைக்க - நடுக்க முண்டாக்கி
வருத்த, ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தமாய் - ஊழிக்காலத்தில்
ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், மதித்தலத்தை எட்டி முட்டி - சந்திர
மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வரும் ஒரு அஞ்சனப் பொருப்பு உதித்தது
ஒத்து - வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணும் விண்ணும்
உட்க வந்தது - மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது
எ - று.
உததி
கொதித்து உட்க நீத்தமாய் வந்த தென்க. அதிர்வு நடுக்க
மாகலின் அதிர்ந்து என்பதற்கு நடுக்க முண்டாக்கி யென்று பொரு
ளுரைக்கப்பட்டது; முழங்கி யென்றுமாம். நீத்தமாய் - நீத்தம் போலாகி,
அஞ்சனப் பொருப்புதித்த தொத்து என்றது இல்பொருளுவமை. மண்ணும்
விண்ணும் : ஆகுபெயர்கள். இது முதல் ஒன்பது செய்யுட்கள்
நாற்சீரடியாகவும் பிரித்தற் கமையுமாயினும் ஓசையை நோக்குழி
எழுசீரடியாகக் கோடலே சிறப்புடைத்தென்க. (7)
(பா
- ம்.) * உதித்த லொத்து.
|