அலைமடங்கும் கடலுமாகிய
இவற்றின் நடுவிலுள்ள, விளைவயல் நகரம்
எல்லாம் - விளை கழனிகளும் ஊர்களுமாகிய எல்லாவற்றையும், வெள்ளி
அம்பலத்துள் ஆடும் - வெள்ளி யம்பலத்திலே திரு நிருத்தம் புரியும், தளை
அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்து - முறுக்கவிழ்ந்த
கொன்றை மலர்மாலை யணிந்த சடையை யுடைய இறைவனுக்கே சேர்த்து,
காவல் வேந்தன் - புரவலனாகிய உக்கிர பாண்டியன், உலகுக்கு எல்லாம் -
உலகங்களுக்கெல்லாம், களைகணாய் இருந்தனன் - பற்றுக் கோடாகி
இருந்தான் எ - று.
கடலால்
அழிவுறாமற் காத்தது சொக்கலிங்கப் பெருமான்
திருவருளென்னுங் கருத்தால், மதுரைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட வற்றை
யெல்லாம் இறைவனுக்குரியவாக்கினன் என்க. வயல்களுடன் கூடிய நகர
மென்னலுமாம். (20)
ஆகச்
செய்யுள் - 1051.
|