பிழைத்து
- பிழைத்தலால்; கோள் நிலை திரிதலால் மழையின்றாகு
மென்பதனை,
"கோணிலை திரிந்திடின்
மாரி வறங்கூரும்" |
என மணிமேகலை
கூறுதலானு மறிக. மா - கருமை; பெருமையுமாம். காமரு,
உ : சாரியை; விருப்பம் பொருந்திய வென்றுமாம். கையறவு - மிக்க துன்பம்;
ஈண்டு வறுமைத்துன்பம்;
"இன்மையி னின்னாத
தியாதெனி னீன்மையின்
இன்மையே யின்னா தது" |
என்று
தமிழ் மறை கூறுவது காண்க. தாம் : அசை. நோக்கி, நோக்க
னோக்கம். (2)
முனிவனை யடைந்து வேந்தர் மூவருந் தங்க ணாட்டிற்
பனிவரு மாரி யின்றி வறந்தமை பகர மேருக்
குனிவரு சிலையார்க் கன்பன் கோணிலை குறித்து நோக்கி
இனிவரு மாரி யில்லை யாதினா லென்னிற்* கேண்மின். |
(இ
- ள்.) வேந்தர் மூவரும் - மூவேந்தரும், முனிவனை அடைந்து
அகத்திய முனிவனை அடைந்து, தங்கள் நாட்டில் பனிவரு மாரி இன்றி
தங்கள் நாட்டினில் குளிர்ச்சிபொருந்திய மழை இன்மையால், வறந்தமை பகர
- வறுமை மிக்கதைக் கூற, மேரு குனிவரு சிலையார்க்கு அன்பன் -
மேருமலையாகிய வளைந்த வில்லையுடைய சிவபெருமானுக்கு அன்பனாகிய
அம்முனிவன், கோள் நிலை குறித்து நோக்கி - கோட்கள் நிற்கும் நிலையை
ஆராய்ந்து பார்த்து, இனிவரும் மாரியில்லை - இனியும் மழை பெய்தல்
இல்லை; யாதினால் என்னில் - எதனாலென்றால், கேண்மின் - கேளுங்கள்
எ - று.
மாரி
இன்றி வறந்தமை - மழை பெய்யாது வறங்கூர்ந்தமையுமாம்.
குனிவரு - வளைதல் பொருந்திய; குனி : முதனிலைத் தொழிற்பெயர். குறித்து
நோக்கல் - நூலானும் மனத்தானும் ஆராய்ந்து காண்டல்; குறித்துணர்தலால்
சோதிடம் குறியென்று பெயர்பெறும். வருமாரி என்பதனை மாரிவருதல் எனக்
கொள்க. கூறுதும் கேண்மின் என்க. (3)
காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த
தூசின வுலகிற் பன்னீ ராண்டுவான் சுருங்கு மென்று
பேசின நூல்கள் மாரி பெய்விப்போற் சென்று கேண்மின். |
(இ
- ள்.) காய் சின வெய்யோன் சேயோன் - மிக்க சினமுள்ள
குரியனும் செவ்வாயும். முன் செல் - முன்னே நடக்க, கதிர்கால் வெள்ளித்
தேசிகன் - ஒளி வீசும் சுக்கிரனாகிய குரவன், பின்பு சென்று நடக்கும்
இச்செயலால் - அவற்றிற்கும் பின்னே செல்லும் இந்தச் செயலினால், முந்நீர்த்
தூசின உலகில் - கடலாகிய ஆடையையுடைய இந்நிலவுலகில்,
|