15.
மேருவைச் செண்டாலடித்த படலம்
|
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
அண்ட ரஞ்ச
வமரு ழந்த வமரர் கோனை யரசர்கோன்
வண்ட லம்பு மௌலி சிந்த வளையெ றிந்து வெந்புறங்
கண்ட வண்ண மின்ன தன்ன கன்னி நாடன் மேருவிற்
செண்டே றிந்து வைப்பெடுத்த செயலு நன்கு செப்புவாம். |
(இ
- ள்.) அரசர் கோன் - மன்னர் மன்னனாகிய உக்கிரவழுதி, அமர்
உழந்த அமரர் கோனை - தன்னுடன் போர் புரிந்த தேவர்க் கரசனை,
அண்டர் அஞ்ச - தேவர்கள் அஞ்சுமாறு, வண்டு அலம்பு மௌலி சிந்த -
வண்டுகள் ஒலிக்கும் (மாலை சூடிய) முடி தகர, வளை எறிந்து வெந் புறம்
கண்ட வண்ணம் இன்னது - திகிரிப் படையை ஓச்சிப் புறங் கண்ட
திருவிளையாடல் இதுவாகும்; அன்ன கன்னி நாடன் - (இனி) அந்தக் கன்னி
நாடனாகிய பாண்டியன், மேருவில் செண்டு எறிந்து - மேருமலையின் மேல்
செண்டினை ஒச்சி, வைப்பு எடுத்த செயலும் நன்கு செப்புவாம் - சேமநிதி
எடுத்த திருவிளையாடலையும் நன்கு கூறுவாம் எ - று.
உழத்தல்
- வருந்திச் செய்தல். வண்டலம்பு என்னும் அடையால் மாலை
சூடிய என வருவிக்கப் பட்டது. வெந், புறம் : ஒரு பொருளிரு சொல். இச்
செய்யுளில் சந்த நலந் தோன்றச் சீரெதுகை பல அமைந்திருத்தல் காண்க. (1)
(இ
- ள்.) மன்னவன் - உக்கிர வழுதி, முன்னர் - முன்பு, மலய
வெற்பின் முனிவர் கோன் - பொதியின் மலையையுடைய முனிவர்
தலைவனாகிய அகத்தியன், தனக்கு சொன்ன திங்கள் விரதம் - தனக்குக்
கூறிய சோமவார விரதத்தை, அன்று தொட்டு நோற்று வரலும் - அற்றை
நாள் முதல்நோற்று வரவும், அந்நல் நலம் செய்பேறுபோல - அந்த நல்ல
விரதம் அருளிய பயன்போல, நங்கை காந்திமதி வயிற்று - பெண்களுட்
சிறந்த காந்திமதியின் வயிற்றிலே, உன் அரும் சயம் கொள்மைந்தன் ஒருவன்
வந்து தோன்றினான் - நினைத்தற்கரிய வெற்றியைப் பெறும் பகல்வன்
ஒருவன் வந்து உதித்தான் எ - று.
மூவேற்தர்க்குங்
கூறியதனைத் தனக்குக் கூறிய தென்றது தனக்கும்
அவ்வுரிமை யுண்மையால்; எவ்வுயிர்க்கும் அப்பனாயுள்ளானை என்னப்பன்
என்பது போல. நல மென்றது விரதத்தை யுணர்த்திற்று. உன் : முதனிலைத்
தொழிற்பெயர். (2)
|