பக்கம் எண் :

612திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வயந்த னைப்ப யந்த தென்ன மைந்த னைப்ப யந்தபோ
தியந்து வைத்து நகர் களிப்ப வினிதி ருந்த புரவலன்
சயந்த ழைக்க விந்தி ரன்ச யந்த னைப்ப யந்தநாள்
வியந்த கத்த டைந்த வின்பம் விளைம மகிழ்ச்சி யெய்தினான்.

     (இ - ள்.) வயந்தனைப் பயந்தது என்ன - மன்மதனைப் பெற்றாற்
போல, மைந்தனைப் பயந்தபோது - புதல்வனைப் பெற்ற பொழுது, நகர்
இயம்துவைத்து களிப்ப - நகரத்திலுள்ளவர்கள் இயங்களை ஒலிப்பித்துக்
களிகூர, இனிது இருந்த புரவலன் - இனிதாக இருந்த உக்கிர வழுதி,
இந்திரன் சயம்தழைக்க சயந்தனைப்பயந்த நாள் - இந்திரனானவன் வெற்றி
பெருகச் சயந்தனைப் பெற்ற பொழுது, வியந்து அகத்து அடைந்த இன்பம்
- வியப்புற்று உள்ளத்திலுற்ற மகிழ்ச்சிபோல, விளை மகிழ்ச்சி எய்தினான் -
மிக்க மகிழ்ச்சியை அடைந்தான் எ - று.

     வயந்தன் - வேனிலுக் குரியவன். வயம் தனை எனப் பிரித்து
வெற்றியையே பெற்றாற் போல என்றுரைத்தலுமாம். துவைத்து : ஈண்டுப்
பிறவினை. சயந்தன் - இந்திரன் மகன். சயந் தழைக்கச் சயந்தனைப் பயந்த
என்பதன் நயத்தினை ஓர்க. இன்பம் போலவென உவமச் சொல் விரிக்க;
இன்பம் விளைக்கும் மகிழ்ச்சி போலும் மகிழ்ச்சியை யென்றலுமாம். (3)

தென்ன ரேறு சாத காதி செய்து வீர பாண்டியன்
என்ன நாம வினை நிரப்பி யெழுதொ ணாத கலைமுதற்
என்று கேள்வி கரிக டேர்கள் பரிப டைக்க லம்பயின்
றன்ன காத லான்வி ளங்க வகம கிழ்ச்சி யடையுநாள்.

     (இ - ள்.) தென்னர் ஏறு - பாண்டியருள் ஆண் சிங்கம் போன்ற
உக்கிரவழுதி, சாதகாதி செய்து - சாத கன்ம முதலிய சடங்குகளைச் செய்து,
வீரபாண்டியன் என்ன நாம வினை நிரப்பி - வீரபாண்டியன் என்று
பெயரிட்டு, எழுத ஒண்ணாத கலை முதல் பன்னு கேள்வி - எழுதலாகாத
மறை முதலாகக் கூறப்பட்ட பல நூல்களையும், கரிகள் தேர்கள் பரி -
யானை தேர் குதிரைகளின் ஏற்றங்களையும், படைக்கலம் - படைக்கல
வித்தையையும், பயின்று - கற்று, அன்னகாதலான் விளங்க - அந்தப்
புதல்வன் விளங்க, அகமகிழ்ச்சி அடையும் நாள் - (அதனைக் கண்டு)
மனமகிழ்ச்சி யடையுங் காலையில் எ - று.

     சாதகாதி : நெடிற் சந்தி. பெயரிடுதலும் சடங்காகலின் ‘நாம வினை
நிரப்பி’ என்றார். எழுதொணாத : அகரம் தொகுத்தல்; ஒன்றாத வென்பது
மரூஉவாயிற்று. பயிற்றுவித்து, அவற்றைப் பயின்று விளங்கக் கண்டு என
விரித்துரைத்துக் கொள்க. (4)

மல்கு மாறில் கோடி ரிந்து மழைசு ருங்கி நதியுநீர்
ஒல்குமாறு பருவ மாறி யுணவு மாறி யுயிரெலாம்
மெல்கு மாறு* பசியு ழந்து வேந்த னுக்கு விளைபொருள்
நல்கு மாறி லாமை யின்ன னலிய வந்த நாடெலாம்.

     (பா - ம்.) * மல்குமாறு.