ஒருவாற்றானும் அளக்க
முடியாத என்றபடி. சேமவைப்பு - பின்
உதவுதற்கென்று வைக்கப்படும் நிதி. சேமம் - காவல். வைப்பு - வைத்தல் :
வைக்கப்படும் பொருளை உணர்த்துகின்றது. (10)
கிடைத்துமற்
றனைய மேரு கிரிசெருக்* கடங்கச் செண்டாற்
புடைத்துநின் னாணைத் தாக்கிப் பொன்னறை பொதிந்த பாறை
துடைத்துநீ வேண்டுங் காறுந் தொட்டெடுத் ததனை மீள
அடைத்துநின் குறியிட் டைய வருதியென் றடிகள் கூற. |
(இ
- ள்.) ஐய - ஐயனே, கிடைத்து -(அதனைஸ்ரீ அடைத்து) அனைய
மேருகிரி செருக்கு அடங்க - அந்த மேருமலையானது செருக்கடங்கு மாறு;
செண்டால் புடைத்து - செண்டாலடித்து, நின் ஆணைத்து ஆக்கி - நினது
ஆணை வழிப்படுத்தி, பொன் அறை பொதிந்த பாறைதுடைத்து -
வேண்டுங்காறும் தொட்டு எடுத்து - நீ வேண்டுமளவும் (பொன்னை) வாரி
யெடுத்து, அதனை மீள அடைத்து - அவ்வறையைத்திரும்ப மூடி, நின் ழுறி
இட்டுவருதி என்று - நினது இலச்சினையைப் பொறித்துவரக் கடவாய் என்று,
அடிகள் கூற - (அங்ஙனம் வந்த) சித்த மூர்த்திகள் கூறியருள எ - று.
செருக்கடக்கி
என்றமையால் முன் அது செருக்குடைத்தெனக் கொள்க.
ஆணைத்து - ஆணையின் கீழது. துடைத்தல் - நீவுதல். கிரிச் செருக்
கென்பது பாடமாயின் கிரியினது செருக்கென்க. (11)
விழித்தன னெழுமான் றேரோன் விழிக்குமுன் கடன்க ளெல்லாங்
கழித்தனன் மீன நோக்கி கணவனை வலமாப் போந்து
சுழித்தெறி கடல னீகத் தொகைபுறஞ் சூழக் கொண்டல்
கிழித்தெழு வாயி னீங்கிக் கீழ்த்திசை நோக்கிச் செல்வான். |
(இ
- ள்.) விழித்தனன் - (உக்கிர பாண்டியன் உடனே) விழித்து,
எழுமான் தேரோன் விழிக்கு முன் கடன்கள் எல்லாம் கழித்தனன் - ஏழு
குதிரைகள் பூட்டிய தேரினையுடைய சூரியன் தோன்றுவதற்கு முன்பே
நாட்கடன் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மீனநோக்கி கணவனை
வலமாப்போந்து - அங்கயற்கண்ணம்மையின் மணாளனாகிய சோமசுந்தரக்
கடவுளை வலம் வந்து, சுழித்து எறி கடல் அனீகத் தொகை புறம் சூழ -
சுழித்து அலைகள் வீசும் கடல் போன்ற சேனைக் கூட்டம் புறத்தேசூழ்ந்துவர,
கொண்டல் கிழிந்து எழுவாயில் நீங்கி - முகில் மண்டலத்தை ஊடுருவி
ஓங்கிய கோபுரவாயிலைக் கடந்து, கீழ்த்திசை நோக்கிச் செல்வான் -
கீழைத்திசை நோக்கிச் செல்வானாயினன் எ - று.
விழிக்கு
முன் விழித்தன னென்பது நயமுடைத்தேனும் கனவு
கண்டவுடன் விழித்தனன் என்பதே பொருட் பொருத்த முடைத்தாம்.
விழித்தனன், கழித்தனன் : முற்றெச்சங்கள். வலமா : விகாரம். அனீகம் -
சேனை (12)
(பா
- ம்.) * கிரிச்செருக்.
|