பக்கம் எண் :

மேருவைச் செண்டாலடித்த படலம்617



அதிர்ந்தன முரசஞ் சங்க மதிர்ந்தன வியங்களண்டம்
பிதிர்ந்தன வென்ன வார்ப்பப் பெயர்ந்துவெண் கவரி துள்ள
முதிர்ந்தநான் மறையோ ராசி மொழியநா வல்லோ ரேத்தப்
பதிந்துபார் கிழயத் திண்டேர் பாகுமுன் செலுத்த வூர்ந்தான்.

     (இ - ள்.) முரசம் அதிர்ந்தன - பேரிகை ஒலிக்கவும். சங்கம்
அதிர்ந்தன - சங்கு ஒலிக்கவும், இயங்கள் அண்டம் பிதிர்ந்தன என்ன
ஆர்ப்ப - இயங்களெல்லாம் அண்டங்கள் பிளந்தன என்னுமாறு ஒலிக்கவும்,
வெண் கவரி பெயர்ந்து துள்ள - வெள்ளிய சாமரைகள் ஒலிக்கவும், வெண்
கவரி பெயர்ந்து துள்ள - வெள்ளிய சாமரைகள் எழுந்து துள்ளவும், முதிர்ந்த
நான் மறையோர் ஆசி மொழிய - நான்கு மறைகளிலும் பயிற்சி மிக்க
அந்தணர்கள் வாழ்த்துக் கூறவும் நாவல்லோல் ஏத்த - புலவர்கள் புகழ்ந்து
பாடவும், பதிந்து பார்கிழிய உருள் பதிதலால் பிளக்குமாறு, திண் தேர் பாகு
முன் செலுத்த ஊர்ந்தான் - வலிய தேரைப் பாகன் முன்னே செலுத்தச்
சென்றான் எ - று.

     அதிர்ந்தன வென்பன அதிர வென்னும் பொருள் குறித்தன; ஆர்ப்ப
என்பதனோடியைத்து, அதிர்ந்தன வாய் ஆர்ப்ப எனலுமாம் பாகு - பாகன்;
செசல்லால் அஃறிணை. முன்பாகன் செலுத்த என்றமையால் ஊர்ந்தான்
என்பதற்குச் சென்றான் என்பது பொருளாயிற்று. (13)

பவளக்காற் பிச்சம் பொற்காற் பன்மணிக் கவிகை முத்தத்
தவளக்காற் பதாகைக் காடுந் தானவா னருவி தூங்குங்
கவளக்காற் பொருப்பும் பாய்மாக் கடலுமண் மடந்தை யாகந்
துவளக்கால் வயவர் மான்றேர்த் தொகுதியுஞ் சூழல் போக.

     (இ - ள்.) பவளக்கால் பிச்சம் - பவளத்தாற் செய்த காம்பினை
யுடைய பீலிக் குடையும், பொன்கால பல் மணிக் கவிகை - பொன்னாற்
செய்த காம்பையுடைய பல முத்துக்குடைகளும், முத்தம் தவளக்கால்
பதாகைக் காடும் - முத்துக்கள் கோத்த வெள்ளிய காம்பையுடைய வெற்றிக்
கொடியின் காடும், தானவான் அருவி தூங்கும் கால்கவளம் பொருப்பும் -
மதமாகிய பெரிய அருவி ஒழுகும் காலையுடைய கவளம் உண்ணும்
மலைபோன்ற யானைகளும். பாய்மாக்கடலும் - தாவுகின்ற குதிரை
வெள்ளமும், கால் வயவர் மான் தேர்தொகுதியும் - வீரர்கள் கூட்டமும்
குதிரை பூட்டிய தேர்க் கூட்டமும், மண் மடந்தை ஆகம் துவள சூழல்போக
நிலமகளின் உடல் வருந்தச் சூழ்ந்து வரவும் எ - று.

     பதாகை - பெருங்கொடி. காடு போறலின் காடு என்றார். காடும்
மலையும் கடலும் என ஓர் நயம்படக் கூறினார். காலாள் என்பவாகலின்
‘கால்வயவர்’ என்றார். வயவர் தொகுதியுமென்க. சூழல்போக - சூழ்போக.(14)

கோழிணர் ஞாழ லன்ன கோட்டுகிர்ப் புலவுப் பேழ்வாய்த்
தாழசின வுழுவை யொற்றைத் தனிப்பெருங் கொடியுங் கூனற்
காழ்சிலைக் கொடியுஞ் சூழக் கயற்கொடி நிலத்து ழாங்கை
எழுயர் வரைமேற் றோன்றி யிருவிசும் பகடு கீறி.