(இ
- ள்.) கோழ் இணர் ஞாழல் அன்ன கோட்டு உகிர் - கொழுவிய
பூங்கொத்தினையுடைய ஞாழலின் பூவையொத்தவளைந்த நகத்தையும்,
புலவுப்பேழ்வாய் - புலால் நாற்றத்தையுடைய பிளந்தவாயையும் தாழ்சினம்
- அடிப்பட்ட சினத்தையும் உடைய, உழுவை ஒற்றைத் தனிப்பெருங்
கொடியும் - புலி எழுதிய ஒப்பற்ற பெரிய கொடியும், கூனல் காழ் சிலைக்
கொடியும் சூழ் - வளைவினையுடைய வலிய வில் எழுதிய கொடியும் சூழ்ந்து
வர, கயல்கொடி - மீனக் கொடியானது, நிலம் துழாம் கை ஏழு உயர்
வரைமேல் தோன்றி - நிலத்தைத் தடவுகின்ற துதிக்கையையுடைய ஏழு முழம்
உயர்ந்த மலைபோன்ற யானை மேலே தோன்றி, இருவிசும்பு அகடு கீற -
பெரிய வானின் வயிற்றைக் கிழித்துச் செல்லவும் எ - று.
ஞாழல்
- புலிநகக் கொன்றை, தாழ்தல் - தங்குதல், அடிப்படுதல்.
உழுவை - புலி. ஒற்றை, தனி என்பன ஒப்பற்ற வென்னும் ஒருபொருளில்
வந்தன. காழ - காம்புமாம். சோழ சேரர்களின் கொடிகள் கீழ்ப்பட்டுவர
என்றார்; மூவேந்தருள் ஒருவர் பிற நாட்டினமற் செல்லும் பொழுது
ஏனையிருவர் கொடியும் உடன்வரச் செல்லுதல் மரபு. துழாவு மென்பது
விகார மாயிற்று. ஏழென்னும் எண்ணுப் பெயர் ஏழு முழத்திற் காயிற்று.
யானைக்கு உத்தம விலக்கணம் ஏழு முழ வுயரம் என்ப; சிந்தாமணியில்,
என்பதற்கு நச்சினார்க்கினியர்
கூறிய பொருள் காண்க. (15)
தென்கடல் வடபா னோக்கிச் செல்வது போலத் தென்னன்
றன்கட லனிகங் கன்னித் தண்டமிழ் நாடு நீந்தி
வன்கட நெறிக்கொண்டேகி வளவர்கோ னெதிர்கொண் டாற்றும்
நன்கடன் முகம னேற்று நளிர்புன னாடு நீந்தி. |
(இ
- ள்.) தென்னன் - உக்கிர பாண்டியன், தென்கடல் வட பால்
நோக்கிச் செல்வதுபோல - தெற்குக் கடலானது வடதிசையை நோக்கிச்
செல்லுவதுபோலச் செல்லா நின்ற, தன் கடல் அனிகம் தண் தமிழ் கன்னி
நாடு நீந்தி - தனது கடல் போன்ற சேனையொடு குளிர்ந்த தமிழ் வழங்ம்
கன்னி நாட்டைக் கடந்து, வன்கடம் நெறிக் கொண்டு ஏகி - வலிய காட்டு
வழியாற் சென்று, வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும் நன் கடன்
முகமன் ஏற்று - சோழ மன்னன் எதிரேற்றுச் செய்யும் நல்ல வரிசையாகிய
உபசாரங்களை ஏற்றுக் கொண்டு, நளிர் புனல் நாடு நீந்தி - குளிர்ந்த நீர்
நாடாகிய அச்சோழ நாட்டைக் கடந்து எ - று.
செல்லா
நின்ற அனிகத்தோடு என விரிக்க. தண்டமிழ்நாடாகிய கன்னி
நாடு. கடன் என்றது வரிசையை; முகமனாகியகடனென்றுமாம். (16)
தண்டக நாடு தள்ளித் தெலுங்கநா டகன்று சாய்தாட்
கண்டகக் கைதை வேலிக் கருநடங் கடந்து காடுந்
தொண்டகந் துவைக்குங் குன்று நதிகளுந் துறந்து கள்வாய்
வண்டக மலர்க்கா வேலி மாளவ தேச நண்ணி. |
|