நீரையுடைய கங்கையாற்றைக்
கடந்து, கல் நெடு அனேக காவதம் நெறி
கடந்த பின்னர் - கற்கள் செறிந்த நீண்ட அனேககாத வழியைக் கடந்த பின்
எ - று.
ஆடல்
- வெற்றி. சடையிற் றாழ்தலால் புனிதமாகிய வென்க;
இவ்வரலாறு முன் உரைக்கப் பட்டது; தாழ்ந்து - தங்கி யென்றுமாம். காவத
நெறியை யெனக் கூட்டுக. (19)
மடங்கன்மா
நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா
இடங்கடந்தாக வைஞ்ஞூற் றிரட்டியோ சனைத்தா மெல்லைக்
கடங்கெழு குமரி கண்டங் கடந்துமற் றதுபோ லெட்டுத்
தடங்கெழு கண்டங் கொண்ட பாரத வருடந் தள்ளி. |
(இ
- ள்.) மடங்கல் மா நாகம் யாளி வழங்கலால் - சிங்கங்களும்
பெரிய யானைகளும் யாளிகளும் இயங்குதலால், மனிதர் செல்லா இடம்
கடந்து - மக்கள் வழங்குதல் இல்லாத இடங்க்ளைக் கடந்து, ஆக ஐஞ்ஞூற்று
இரட்டி யோசனை எல்லைத்து ஆம் - இவையெல்லாமாக ஆயிரம் யோசனை
அளவை யுடையதாகிய, கடம்கெழு குமரி கண்டம் கடந்து - காடுகள்
பொருந்தி குமரி கண்டத்தை இங்ஙனம் கடந்து, அதுபோல் எட்டுத் தடம்
கெகு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி - அது போல விரிவு
பொருந்திய எட்டுக் கண்டங்களைக் கொண்ட பாரத வருடத்தை கழித்து
எ - று.
ஆக
வென்றது முற்கூறிய வெல்லாம் சேர என்றபடி. யோசனை
யெல்லைத்தாம் எனப் பிரித்துக் கூட்டுக. மற்று : அசை. ஒன்பான்
கண்டங்களின் பெயர்களை,
"வடபால் விதேகம்
தென்பால் விதேகம்
கீழ்பால் விதேகம் மேல்பால் விதேகம்
வடபா லிரேவதம் தென்பா லிரேவதம்
வடபாற் பரதம் தென்பாற் பரதம்
மத்திம கண்டமென் றித்திற மென்ப
நாவலந் தீவின் நவகண்டப் பெயரே" |
என்று திவாகரம்
கூறுகின்றது. (20)
யாவையு மீன்றா
டன்னை யீன்ற பொன் னிமயந் தன்னைத்
தாவியப் புறம்போய்ப் போகந் ததும்புகிம் புருட கண்டம்
யேவியங் கதுநீத் தேம வெற்படைந் ததுபின் னாக
ஓவியப் புறத்துத் தோன்று மரிவரு டத்தை யுற்று. |
(இ
- ள்.) யாவையும் ஈன்றாள் தன்னை ஈங்னற - எல்லா
வுலகங்களையும் பெற்ற உமாதேவியைப் பெற்றதாகிய, பொன் இமயம்
தன்னைத் தாவி அப்புறம் போய் - பொன் வடிவாகிய இமயமலையைத்
தாண்டி அப்பாற் சென்று, போகம் ததும்பு கிம்புருட கண்டம் மேவி -
போகம் நிரம்பிய கிம்புருட கண்டத்தை யடைந்து, அங்கு அதுநீத்து அங்கு
அதனைக் கடந்து, ஏம வெற்பு அடைந்து - ஏம வரையை
|