மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தன னென்றா னைய
உன்னது புலத்தோர்க் கேற்ப வுரைபடு மாற்ற தாய
பொன்னவிர் தேமா நீழற் புதைபடக் கிடக்குஞ் செம்பொன்
என்னவங் கையாற் சுட்டிக் காட்டிய தெரிபொற் குன்றம். |
(இ
- ள்.) மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தனன் என்றான் -
(அதற்கு) உக்கிரபாண்டியன் நிதிபெறுதலை விரும்பிவந்தேன் என்றான்; ஐய
- ஐயனே, உன்னது புலத்தோர்க்கு ஏற்ப உரை படு மாற்றது ஆய செம்பொன்
- உன்னுடைய நாட்டிலுள்ளோர்க்கு இசைய உரைகக்ப் படும் மாற்றினை
யுடையதாகிய செம் பொன், பொன் அவிர் தேமா நிழல்புதைபடக் கிடக்கும்
- பொன் போல விளங்கும் தளிர்களையுடைய இத்தேமாமரத்தின் நிழலின்கீழ்
(ஓர் அறையில் பாறையால்) மூடப் பட்டுக்கிடக்கும், என்ன - என்று கூறி,
எரி பொன் குன்றம் அங்கையால் சுட்டிக் காட்டியது - விளங்கம்
மேருமலைத்தெய்வம் அழகிய வைவிரலால் அவ்விடத்தைச் சுட்டிக்
காட்டியது எ - று.
உன்னது
: விரித்தல். உரைபடும் - உரைத்துக் காட்டப்படும். மாற்றதாய
செம் பொன் எனக் கூட்டுக. மாற்றுமக்க பொன்னும் இங்குளது; அஃது
நினக்கு வேண்டா என்று குறிப்பிட்டவாறாயிற்று. என்ன - என்றுகூறி; கூறி
யென்பது வருவிக்கப்பட்டது. (32)
மின்னகு வேலான் முந்நீர் வேலையை வணக்கங் கண்டோன்
பொன்னறை மருங்கிற் போகிப் பொத்திய பாறை நீக்கித்
தன்னவா வளவிற் றாய தபனிய முகந்து மூடிப்
பின்னதுந் தன்ன தாகப் பெயரிலச் சினையுந் தீட்டா. |
(இ
- ள்.) மின்நகு வேலால் முந்நீர் வேலையை வணக்கம் கண்டோன்
- மின்போல விளங்கும் வேற்படையால்மூன்று நீர்களையுடைய கடலைத்
தனதடிக்கீழ்ப் படுத்திய உக்கிரவழுதி, பொன் அறை மருங்கில் போகி -
நிதியறையின் அருகிற் சென்று, பொத்திய பாறை நீக்கி - மூடிய பாறையை
நீக்கி, தன் அவா அளவிற்று ஆய தபனியம் முகந்து - தனது விருப்பின்
அளவினதாய பொன்னை அள்ளிக் கொண்டு, மூடி - அப்பாறையை மீண்டும்
மூடி பின்னதும் தன்னதாகப் பெயர் இலச்சினையும் தீட்டா - எஞ்சிய
பொன்னையும் தன்னுடையதாக (வைத்துத்) தன் பெயர் முத்திரையும்
பே்பாறைமேல் எழுதி எ - று.
வணக்கங்
கண்டோன் - வணங்குவித்தோன் - பொத்திய - மூடிய
தன்னதாக - தனக்குரியதாக வைத்து, பெயராகிய இலச்சினை யென்க.
பெயரும் இலச்சினையுமென்றும் ஆம்; இதற்குச் சேல் இலச்சினை யென்க.
(33)
மின்றிகழ் மணிப்பூண் மார்பன் மீண்டுதன் றானை யோடுந்
தென்றிசை நோக்கிப் பாகன் செலுத்தமான் றடந்தே ரூர்ந்து
பொன்றிகழ் வரையும் போக பூமியும் பிறவு நீத்து
நன்றிகொண் மனிதர் வைப்பி னண்ணுவா னண்ணு மெல்லை. |
(இ
- ள்.) மின் திகழ் மணிப்பூண் மார்பன் - மின்போல விளங்கும்
மணிகள் குயிற்றிய அணிகளையுடையமார்பனாகிய உக்கிரபாண்டியன், மீண்டு
|