பக்கம் எண் :

630திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
 
புவனியிம் முறையாற் புரந்தளித் தாரம்
     பூண்டபாண் டியன்றிரு மகனுக்
கவனியே ழறிய வீரபாண் டியனென்
     றணிமுடி கவித்தர சளித்து
நவநிர திசய பூரண வின்ப
     ஞானநோக் கருளிய மதுரைச்
சிவனடி நிழலிற் பிளப்பறப் பழைய
     தேசொடு நிறைந்துவீற் றிருந்தான்.

     (இ - ள்.) ஆரம்புண்ட பாண்டியன் - ஆரந்தாங்கு பாண்டிய
னென்னும் உக்கிரவழுதி, புவனி இம்முறையால் புரந்து அளித்து . நிலவுலகை
இம்முறையினால் நன்றாகப் பாதுகாத்து, திருமகனுக்கு - தன் திருமைந்தகுக்கு,
அவனி ஏழ் அறிய - ஏழுலகும் அறியுமாறு, வீர பாண்டியன் என்று -
வீரபாண்டியன் என்று கூறி, அணிமுடி கவித்து - அழகிய முடிசூட்டி, அரசு
அளித்து - அரசுரிமையைத் தந்து, நவநிரதிசய பூரண இன்பம் ஞான நோக்கு
அருளிய - புதுமை யாகிய ஒப்பற்ற நிறைந்த இன்பத்திற் கேதுவாகிய ஞான
நாட்டத்தை அருளாநின்ற, மதுரைச்சிவன் அடி நிழலில் - மதுரைப் பதியில்
எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடி நீழலில், பிளப்பு அற
பழைய தேசொடு நிறைந்து வீற்றிருந்தான் - இரண்டறப் பழைய ஒளியொடு
நிறைந்து வீற்றிருந்தான் எ - று.

     புரந்து அளித்து, ஒரு பொருளன. ஏழும் என்னும் உம்மை தொக்கது.
அருளிய - அருளாநின்ற வென்க; அருளும்பொருட் டென்பாரும் உளர்.
சிவபெருமானது நுதற் கண்ணினின்றும் தோன்றிய முருகவேளே
உக்கிரவன்மனாக அவதரித்தானாகலின் ‘பழைய தேசொடு’ என்றார். (41)

ஆகச்செய்யுள் - 1151.