பக்கம் எண் :

வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்631



16. வேதத்துக்குப் பொருளருளிச்செய்த படலம்

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
 
உலம்பொரு தடந்தோ ளுக்கிரச் செழிய
     னுயரிய மேருமால் வரையைப்
பொலம்புரி செண்டாற் புடைத்துவைப் பெடுத்துப்
     போந்தரு ளடைந்தவா புகன்றும்
வலம்படு திணிதோள் வீரபாண் டியன்கோல்
     வழங்குநாண் மதுரையெம் பெருமான்
புலம்பொரு முனிவர் தேறநால் வேதப்
     பொருளுணர்த் தியதிறம் புகல்வாம்.

     (இ - ள்.) உலம் பொருதடம்தோள் உக்கிரச் செழியன் - திரண்ட
கல்லுப்போலும் பெரிய தோளையுடைய உக்கிரவழுதி, உயரிய மேரு
மால்வரையை - உயர்ந்த மேரு என்னும் பெரிய மலையை. பொலம்புரி
செண்டால் புடைத்து - பொன்னாற் செய்த செண்டினால் அடித்து, வைப்பு
எடுத்துப் போந்து - நிதியை எடுத்து வந்து, அருள் அடைந்தவா புகன்றும் -
திருவருளைப்பெற்ற திருவிளையாடலைக் கூறினாம். வலம்படு திணிதோற் வீர
பாண்டியன் - (இனி) வெற்றி பொருந்திய வலிய தோள்களையுடைய வீர
பாண்டியன், கோல் வழங்கும் நாள் - செங்கோ லோச்சும் பொழுது. மதுரை
யெம்பெருமான் - மதுரையில் எழுந்தருளிய எம் பெருமானாகிய
சோமசுந்தரக் கடவுள், புலம்பொரு முனிவர் தேற - புலன்களை வென்ற
முனிவர்கள் தெளிய, நால்வேதப் பொருள் உணர்த்திய திறம் புகல்வாம் -
நான்கு வேதங்களின் பொருளை அறிவுறுத்திய திருவிளையாடலைக் கூறுவாம்
எ - று.

     உலம் - திரண்ட கல். பொரு - மாறுபடுகின்ற எனினுமாம். அருள்
அடைதல் - திருவடிநீழலிற் கலத்தல். அடைந்தவா : ஈறு தொக்கது. புகன்றும்
இறந்த காலத்தன்மைப் பன்மை முற்று. புலம்பு ஒரு எனப் பிரித்துத், துன்பம்
நீங்கிய என்றுரைத்தலுமாம். (1)

ஐம்பெரும் பூத நிலைதிரிந் தீரே
     ழடுக்கிய வுலகொடு மயன்மால்
உம்பர்வான் பதமு முதித்தவா றொடுங்க
     வுருத்ததோ ரூழிவந் தெய்தச்
செம்பொருண் மறையு மொடுங்கிய வழிநாட்
     செஞ்சுடாக் கடவுள்முன் மலரும்
வம்பவிழ் கமல மெனவரன் றிருமுன்
     மலர்ந்ததா லகிலமு மாதோ.

     (இ - ள்.) ஐம்பெரும் பூதம் நிலை திரிந்து - ஐந்து பெரிய பூதங்களும்
தத்தம் நிலையில் மாறுபட்டு, ஈர் ஏழ் அடுக்கிய உலகொடும் - பதினான்காக