பக்கம் எண் :

632திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அடுக்கப்பட்ட உலகங்களுடன், அயன்மால் உம்பர்வான் பதமும் - பிரமன்
திருமால் ஏனைத் தேவர்கள் ஆகிய இவர்களின் பெரிய பதங்களும்,
உதித்தவாறு ஒடுங்க - தோன்றியவாறே ஒடுங்க, உருத்தது ஓர் ஊழி வந்து
எய்த - உட்குந் திறத்ததாகிய ஓர் ஊழிக காலம் வந்து பொருந்த,
செம்பொருள் மறையும் ஒடுங்கிய - மெய்ப் பொருளை யுடைய மறைகளும்
ஒடுங்கின; வழிநாள் - பின்னாளில், செஞ்சுடர்க் கடவுள் முன் - சிவந்த
கிரணங்களையுடைய ஆதித்தன் முன்னே, மலரும் வம்பு அவிழ் கமலம் என
- மலருகின்ற மணங்கமழும் தாமரை மலர்போல, அரன் திருமுன் - சிவ
பெருமான் திரு முன்னர், அகிலமும் மலர்ந்தது - யாவுந் தோன்றியது எ-று.

     அயன் மால்களின் மேலிடத்துள்ள பெரிய பதம் என்னலுமாம்.
உதித்தவா றொடுங்கல் - எது எதனிடத்திற் றோன்றியதோ அது
அதனிடத்தில் ஒடுங்கல். உருத்தது : உரு என்னும் உரிச்சொல் லடியாகப்
பிறந்தது; வெகுண்ட தென்றும், தோன்றிய தென்றும் கூறலுமாம். ஒடுங்கிய :
முற்று. இறைவன் ஒரு தொழிலுமின்றியிருப்ப அவனது சந்நிதிக்கண்ணே
உலகங்கள் தோன்றின என்றார்; சந்நிதி - சத்தி சங்கற்பம்.

"மன்னுசிவன் சந்நிதியின் மற்றுலகஞ் சேட்டித்த
தென்னு மறையி னியன்மறந்தாய்"

என்பது சிவஞானபோதம். மலர்ந்தது - மலர்ந்தன : பன்மையிலொருமை.
மாது, ஓ : அசைகள். (2)

பண்டுபோற் பின்னு முத்தொழி னடாத்தப்
     பராபரஞ் சுடர்திரு வுள்ளங்
கொண்டு போர்த்திகிரி வலவனைத் தாவிக்
     குரிசிறன் னாபிமுண் டகத்தில்
வண்டுபோற் பிரம னுதித்துமூ வுலகும்
     வரன்முறை படைக்குநா ணஞ்சம்
உண்டுபோற் றியவா னவர்க்குயி ரளித்த
     வும்பர் நாயகன்றிரு வாக்கில்.

     (இ - ள்.) பண்டுபோல் பின்னும் முத்தொழில் நடாத்த - முன்பு
போலப் பின்னும் ஆக்கலாதி மூன்று தொழிலையும் நடாத்தியருள, பராபரஞ்
சுடர்திருவுள்ளம் கொண்டு - சிவபரஞ்சுடர் திருவுள்ளங் கொண்டு, போர்த்
திகிரி வலவனைத்தர - போர்செய்தற்குரிய திகிரிப் படை ஏந்திய திருமலைத்
தோற்றுவிக்க, இக் குரிசில் தன் நாபி முண்டகத்தில் வண்டுபோல் பிரமன்
உதித்து - அத்திருமாலின் உந்திக் கமலத்தினின்றும் வண்டுபோலப் பிரமன்
தோன்றி, மூவுலகும் வரன் முறை படைக்கு நாள் - மூன்று உலகங்களையும்
முறையாகப் படைக்கும்போது, நஞ்சம் உண்டு போற்றிய வானவர்க்கு உயிர்
அளித்த - நஞ்சினை உண்டு வணங்கிய தேவர்களுக்கு உயிரைத் தந்தருளிய
உம்பர் நாயகன் திருவாக்கில் - தேவதேவனாகிய சிவபெருமான்
திருவாக்கின்கண் எ - று.

     ஐந்தொழிலை முத்தொழிலுள் அடக்கிக் கூறுதலும் பெருவழக்கு;