பக்கம் எண் :

656திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     ‘மறைவழி மதங்கட்கெல்லாம் மறை பிரமாணம்’ என்றமையால் வேதம்
பொது நூல் என்பதும், வேதாந்தத் தெளிவாகிய சைவசித் தாந்தங் கூறும்
சிவாகமம் சிறப்புநூல் என்பதும் பெறப்படும்;

"வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள்
வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள்"

என்றும்,

"மிருதிபுராணங் கலைகண் மற்றுமெல்லாம்
மெய்ந்நூலின் வழிபுடையாம்"

என்றும் சிவஞானசித்தியார் கூறுவன நோக்கற்பாலன.

     ‘‘பின்சென்று அறைதரும்’ என்றமையால் மிருதிகளுள்ளும் வேதத்திற்கு
முரணாகாதவையே கொள்ளற்பாலன வென்பது பெற்றாம். அநு குணம் -
பொருந்துவது. உதவியாவது. மார்த்தமென்றும் ஓர் பெயர் கூறுவது என்க.
சுத்தமார்க்கம் என்றது வைதிக சைவத்தை; இதனை,

"சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத
     ‘சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவு முணர்ந்து
பன்மார்க்கப் பொருள் பலவுங் கீழாக மேலாம்
     ‘பதிபசுபா சந்தெரித்துப் பரசிவனைக் காட்டும்"

என்னும் சித்தியார் அருண்மொழியாலும்,

"அந்தோவி ததிசயமிச் சமயம் போலின்
     ‘றறிஞரெல்லா நடுவறிய வணிமா வாதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
     ‘வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
     ‘இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை
சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்
     ‘தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம்"

என்னும் தாயுமானசுவாமிகள் திருப்பாட்டாலும் தெளிக. (41)

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
 
தெருட்பெறு போகம் வீடுகா ரணமாய்ச்
     ‘சிவமய மாமறைப் பொருளை
இருட்கெட வுரைத்தே மிப்பொருட் கதிக
     ‘மில்லையிப் பெரருளெலா முமக்கு
மருட்கெடத் தெளிவ தாகென வினைய
     ‘வழிவழா மாதவர் புறத்தை
அருட்கையால் தடவி யிலிங்கத்துட் புகுந்தா
     ‘னருள்பழுத் தன்னதே சிகனே.