பக்கம் எண் :

வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்657



     (இ - ள்.) தெருள் பெறு போகம் வீடு காரணமாய் - தெளிவு பெற்ற
போகத்திற்கும் வீட்டிற்கும் காரணமாகி சிவமயமாம் மறைப் பொருளை -
சிவமயமாகிய மறைகளின் பொருளை, இருள் கெட உரைத்தேம் - அறியாமை
நீங்கக்கூறினேம்; இ பொருட்கு அதிகம் இல்லை - (நாம் கூறிய) இந்தப்
பொருளுக்கு மேலான பொருள் இல்லை; இ பொருள் எல்லாம் உமக்கு
மருள்கெட தெளிவது ஆகென - இப்பொருளனைத்தும் நுமக்கு மயக்கந்தீர
விளங்குவதாக என்று, அருள் பழுத்தன்ன தேசிகன் - அருள் கனிந்தா
லொத்த வடிவத்தையுடைய சிவபெருமானாகிய குரவன், இனைய வழிவழா
மாதவர் புறத்தை - இந்த வழியினின்றும் வழுவாத முனிவர்கள் முதுகை,
அருள் கையால் தடவி இலிங்கத்துள் புகுந்தான் - அருளாகிய தமது
திருக்கரத்தாலே தடவிச் சிவலிங்கத்துட் புகுந்தருளினான் எ - று.

     போகத்திற்கும் வீட்டிற்கும் என விரிக்க. தெளிவது : பன்மையி
லொருமை வந்தது. ஆகென : விகாரம். "அரன்றன் கரசரணாதி சாங்கம்
தருமருள்" என்பதனால், அருளாகிய கை என உரைக்கப்பட்டது.
பகுத்தாலன்ன என்பது தொக்கது. (42)

ஆகச் செய்யுள் - 1193.