உலகிற்கு அருளுடன்
கூடிய குடையால் நிழலைச் செய்ய ஒரு புதல்வன்
வந்து தோன்றினான் எ - று.
கங்கை
தூய்மைக்கு எடுத்துக் காட்டு;
என்னும் ஆத்திரையன்
பேராசிரியனது சூத்திரமும் காண்க. சிறந்த என்னும்
பெயரெச்சமும், புரை என்னும் பெயரெச்ச முதனிலையும் முறையே கற்பினாள்
என்தன் விகுதியையும், பகுதியையும் கொண்டு முடியும். அங்குரம் போன்று
நிழற்றுமாறு உதித்தான் என்க. சிறிய ஆலம் வித்திற் றோன்றிய முளை பின்
பணைத்து வளர்ந்து பெரிய நிழலைச் செய்வதுபோல் இவ்விளங்குமரன்
ஒருவனே பின் உலக முழுதும் நிழல் செய்வான் என்றார்;
என்றார் சிந்தாமணியுடையாரும்;
ஆலம் வித்து நிழல் செய்தல்,
"உறக்குந் துணையதே
ராலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாங்கு" |
என்று பிறராலும் கூறப்பட்டது.
நிறையுநீர் - நிறைந்த நீரினையுடையது; கடல்.
குடை நிழல் செய்தலை, "கண்பொர விளங்குநின் விண் பொருவியன் குடை,
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய, குடிமறைப்பதுவே" என்னும்
புறப்பாட்டாலறிக. (4)
அத்த னிச்சிறு குமரனுக் ககங்களி சிறப்ப
மெய்த்த நூன்முறை சாதக வினைமுதல் வினையும்
வைத்த னான்பொலி வெய்துநாள் மன்னவ னூழ்வந்
தொத்த நாள்வர வேட்டைபுக் குழுவைகோட் பட்டான். |
(இ
- ள்.) அத்தனிச் சிறுகுமரனுக்கு - அந்த ஒப்பற்ற சிறிய
புதல்வனுக்கு, அகம் களி சிறப்ப - மனமகிழ்ச்சி மிக, மெய்த்த நூல் முறை
- உண்மையையுடைய வேத நூலிற் கூறிய முறைப்படி, சாதக வினை முதல்
வினையும் வைத்து - சாதகன்ம முதலாகப் பிறசடங்குகளையுஞ் செய்து
முடித்து, அன்னான் பொலிவு எய்துநாள் - அப்புதல்வன் விளக்கமுடன்
வளர்ந்து வருங்காலத்தில், மன்னவன் - வீரபாண்டியன், ஊழ்வந்து ஒத்த
நாள் வர - போகூழ் வந்து பொருந்திய நாள் வந்தமையால் வேட்டை புக்கு
உழுவை கோடபட்டான் - வேட்ட மாடுவான் சென்று புலியினாற்
பற்றப்பட்டான் எ - று.
தனிக்
குமரன் - ஒருவனாகிய குமரனுமாம். மன்னவன் வைத்து எய்து
நாள் புக்குக் கோட்பட்டான் என்க. வேட்டையிற் புக்கென ஏழாம் வேற்றுமை, இது சிறுபான்மை
இயல்பாதல் கொள்க. உழுவை கோட்பட்டான் : மூன்றாம்
வேற்றுமையில் தம்மினாகி தொழிற்சொல் முன்வர வலி யியல்பாயிற்று. (5)
வேங்கை வாய்ப்படு மீனவன் விண்விருந் தாக
வாங்கு நூன்மருங் கிறக்கர மார்பெறிந் தாரந்
தாங்கு கொங்கைசாந் தழிந்திடத் தடங்கண்முத் திறைப்ப
ஏங்க மாதர்டொன் னகருளார் யாவரு மிரங்க. |
|