பக்கம் எண் :

திருநாட்டுச் சிறப்பு69



உக்கிரகுமார பாண்டியராகவும் இந்நாட்டிலிருந்து ஆட்சி நடாத்திய
செய்திகள் மேல் இப்புராணத்துள் விளக்கமாம். இம் மூவருள்ளும்
வேற்றுமை யின்றென்பார் ‘மூன்று தலைவரான்’ என்றார்.
செந்நிறமுடைமையால் முருகக்கடவுளுக்குச் சேய் என்பது ஒருபெயர்.
செய்த, செயப்பாட்டு வினைப்பொருளது. உண்டாகுமோ என்றது உளதோ
என்னுமாத்திரையாய் நின்றது. தலைவ ரானும் என்னும் முற்றும்மை
தொக்கது. (60)

               திருநாட்டுச் சிறப்பு முற்றிற்று.

                     ஆகச் செய்யுள் - 60