பக்கம் எண் :

708திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஒளியையுடைய திங்களின் மரபில் வந்தவனாகிய அபிடேக பாண்டியன் எ-று.

     முரித்து - தாழைப் போக்கி. தந்தையின் கிழத்தியர் ஈன்ற தனயராயும்
தனக்கு முன்னவராயுமிருப்பினும் முடி முதலியவற்றைக் கவர்ந்து
ஒளித்தாராகலின் 'ஒளித்த தெவ்வரை' என்றார். அவர், முறையின்றிக் கவர்ந்த
பொருள்களை மீட்டு வாங்கியதன்றி, அவர்க்கு யாதும் இன்னல் விளைத்தில
னென்பது தோன்ற 'தனமெலா மீள வாங்கினான்' என்று கூறி விடுத்தார்.
தந்தை தன், தன் : சாரியை. ஈர்ங்கதிர், கதிரையுடைய திங்களுக்கு
ஆகுபெயர். (93)

ஆகச்செய்யுள் - 1287.