(இ
- ள்.) மீனம் வன் கொடியவனாகிய விக்கிரமன் வேந்தன் - கயல்
எழுதிய வலிய கொடியினையுடையவனாகிய விக்கிரமபாண்டிய னென்னும்
மன்னன், தன் தோள் ஏந்து மண் பொளை - தனது தோளாற் சுமந்த
புவிச்சுமையை, இராச சேகரன் புயத்து இறக்கி - இராச சேகரன் என்னும்
புதல்வன் தோளில் இறக்கிவிட்டு, ஐந்தரு நாடன் - பஞ்ச தருக்களையுடைய
நாட்டையுடைய இந்திரனும், பூந் தண்மா மலர் வேதியன் -
பொலிவினையுடைய தண்ணிய சிறந்த தாமலை மலரில் வசிக்கும் பிரமனும,
மாதவன் புத்திரன்மேல் பொலிந்து ஓங்கும் - திருமாலுமாகிய இவர்களுடைய
உலகத்திற்கு மேலே பொலிந்து ஓங்கிய, நீறு சாந்தம் என சண்ணித்த
புண்ணியத் தனிமுதல் நகர் சார்ந்தான் - திருநீற்றினைச் சந்தனமாகப் பூசிய
அற வடிவுடைய ஒப்பற்ற முதற்கடவுளாகிய சிவபிரான் உலகத்தை
அடைந்தான்.
வல்
மீனக்கொடியவனாகிய விக்கிசமவேந்தன் என்க. இராச சேகரன்
புயத்தில் ஏந்துமாறு இறக்கி, தான் சுமை ஒழிந்தமையால் இறக்கி என்றார்.
புரத்தின்மேற் பொலிந்தோங்கும் நகர் எனக் கூட்டுக. சண்ணித்தல் - பூசுதல்;
"மெய்யெலாம்
வெண்ணீறு சண்ணித்த மேனியான்" |
என்பது திருநாவுக்கரசர்
திருவாக்கு. (2)
கண்ண கன்புவி யிராசசே கரன்பொதுக்
கடிந்துசெங் கோலோச்சி
வண்ண வெண்குடை நிழற்றுவா னானந்த
வடிவமாய்த் தனிமன்றுள்
அண்ண லாடிய திருநடத் தன்பினா
லாடனூ லொழித்தேனை
எண்ணு மூவிரு பத்துமுக் கலையுங்கற்
றிறைமுறை செயுநாளில். |
(இ
- ள்.) இராச சேகரன் கண் அகன்புவி பொதுக்கடிந்த - இராச
சேகர பாண்டியன் இடமகன்ற இந்நிலவுலகைப் பொது நீக்கி, செங்கோல்
ஒச்சி வண்ணம் வெண்குடை நிழற்றுவான் - செங்கோலை நடாத்தி அழகிய
வெண்கொற்றக் குடையால் நிழலைச் செய்து, ஆனந்த வடிவமாய்த் தனி
மன்றுள் ஆடிய அண்ணல் திரு நடத்து அன்பினால் - இன்ப வடிவமாய்
ஒப்பற்ற மன்றின்கண் ஆடியருளும் இறைவனது திருநடத்தில் வைத்த
பேரன்பினால், ஆடல் நூல் ஒழித்து பரதநூலை நீக்கி, எண்ணும் ஏனை
மூவிருபத்து முக்கலையும் கற்று - எண்ணப்படும் மற்றை அறுபத்து மூன்று
கலைகளையும் கற்று, இறைமுறை செயும் நாளில் - அரசியலை முறைப்படி
நடாத்தி வருநாளில்.
அகன்,
மருஉ. பொதுக்கடிந்து - தனக்கே உரியதாக்கி. நிழற்று வான்
பெயருமாம். இறைவன் புரியும் திருக்கூத்தினைத் தானும் இயற்றுதல்
தகவுடைத்தன்று எனக் கருதி யொழித்தான் என்பார் திருநடத்தன்பினால்
ஆடனூல் ஒழித்து என்றார். (3)
|