பக்கம் எண் :

98திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருளாய வெளியாய் சரணம் மெனையும்
பொருளாக நினைந்து புரந்தரன் மால்
தெருளா தநடந் தெரிவித் தெனையாள்
அருளாய் சரணம் மழகா சரணம்

     (இ - ள்.) இருளாய் வெளியாய் சரணம் - இருளா யுள்ளவனே
வெளியாயுள்ளவனே வணக்கம்; எனையும் பொருளாக நினைந்து -
(ஒன்றுக்கும் பற்றாத) அடியேனையும் ஒரு பொருளாகக் கருதி, புரந்தரன்
மால் தெருளாத நடம் தெரிவித்து எனை ஆள் அருளாய் சரணம் -
இந்திரனும் திருமாலும் அறியாத திருக்கூத்தினைக் காண்பித்து என்னை
ஆளும் அருளை யுடையவனே வணக்கம்; அழகா சரணம் - பேரழகனே
வணக்கம்.

     பாசத்தாற் கட்டுண்ட உயிர்களால் அறிய லாகாமையின் ‘இருளாய்’
என்றார்;

"அருக்கனேர் நிற்பிநு மல்லிருளே காணார்க்
கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்"

என்னும் மெய்கண்டார் திருவாக்கினை நோக்குக. ‘யாவர்க்கு மேலாம்
இளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை’யும் பொருளாக
நினைந்து என்க. இசைப் பொருட்டு மகரம் விரிந்து வருதல் காண்க. (26)

அயனத் தனெனப் படுமா டரவச்
சயனத் தவனைத் தருதத் துவநால்
வயனத் தவவா னவர்வா னவசேல்
நயனத் தவணா யகனே சரணம்.

     (இ - ள்.) அயன் நத்தன் எனப்படும் ஈடு அரவச் சயனத்தவனைத்
தரு தத்துவ - பிரமனையும் சங்கினை ஏந்தியவனென்று சொல்லப்படும்
ஆடுகின்ற அனந்தனைப் பாயலாகக் கொண்ட திருமாலையும் தந்தருளிய
தத்துவ வடிவாயுள்ளவனே, நால் வயனத்தவ - நான்கு வேதங்களாகிய
திரவாக்கினையுடையவனே, வானவர் வானவ - தேவ தேவனே, சேல்
நயனத்தவள் நாயகனே - அங்கயற்கண்ணமையின் நாயகனே, சரணம்
வணக்கம்.

     அயனையும் சயனத்தவனையும் என உருபும் உம்மும் விரிக்க அத்தன்
எனப்பிரித்து, அயனுக்கு அத்தனெனப்படும் என்றுரைத்தலுமாம். சிவபெருமான் அயன் மால்களைத் தந்தமையை,

"மைந்த நின்னையென் வலப்புறத் தளித்தன னறிய
பைந்து ழாய்மணி வண்ணனை யெனதிடப் பாலில்
தந்த ளித்தன னீவிர்வெங் கரிமுகன் றழல்வேற்
கந்த னேரெனக் கருணையி னுச்சிமோந் தளித்தான்"