என்பதனானறிக. வயனம்
- வசனம்; நான்கு மாவாக்கியங்களின் பொருளா
யுள்ளவன் எனலுமாம். (27)
கதவெங் கரியின்
னுரியாய் சரணம்
முதலந் தமிலா முதலே சரணென்
றதிர்பைந் கழனூ புரவண் டலறும்
பதுபங் கயமுன் புபணிந் தரசன். |
(இ
- ள்.) கதவெங் கரியின் உரியாய் சரணம் - சினத்தையுடைய
கொடிய யானைத்தோலாகிய போர்வையை யுடையவனே வணக்கம்; முதல்
அந்தம் இலா முதலே சரண் - முதலும் முடிவும் இல்லாத முதல்வனே
வணக்கம்; என்று - என்று வழுத்தி, அதிர் பைங் கழல் நூபுர வண்டு
அலறும் பதபங்கயம் முன்பு அரசன் பணிந்து - ஒலிக்கின்ற ஒளிபொருந்திய
வீரக்கழலும் சிலம்புமாகிய வண்டுகள் ஆர வாரிக்கும் திருவடித் தாமரையின்
முன்னர் மன்னன் வணங்கி.
ஆடுதலால்
அலருமென்க. பத பங்கயம் என்பதற் கேற்பக் கழலையும்
சிலம்பையும் வண்டாக உருவகித்தார். பசுமை - பொன்னின் ஒளி மேற்று.
பங்கயத்தை முன்பு பணிந்தென்றுமாம். (28)
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
என்றுமிப்
படியே யிந்தத் திருநடம் யாருங் காண
நின்றருள் செய்ய வேண்டு நிருமல மான வெள்ளி
மன்றவ வடியேன் வேண்டும் வரமிது வேன்று தாழ்ந்தான்
அன்றுதொட் டின்று மெங்கோ னந்நட நிலையாய் நின்றான். |
(இ
- ள்.) இந்தத் திருநடம் யாரும் காண - இந்த மாறியாடிய
திருக்கூத்தினை யாவருந் தருசித் துய்யுமாறு, என்றும் இப்படியே நின்று
அருள் செய்ய வேண்டும் - எஞ்ஞான்றும் இவ்வாறே நின்று அருள் புரிய
வேண்டும்; நிருமலம் ஆன வெள்ளி மன்றவ - தூய்மையாகிய
வெள்ளியம்பலத்தையுடையானே, அடியேன் வேண்டும் வரம் இது என்று
தாழ்ந்தான் - அடியேன் வேண்டுகின்ற வரம் இதுவே என்று வணங்கினான்;
அன்று தொட்டு இன்றும் எங்கோன் அந்நட நிலையாய் நின்றான் - அன்று
முதல் இன்று காறும் எம்பெருமானாகிய வெள்ளியம்பலவாணன் மாறியாடிய
அந்நிலையாகவே நின்றருளினான்.
ஒன்றுக்கும்
பற்றாத என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு ஆடிய
பெருங் கருணைத் திறத்தை உலகம் அறிந்துய்ய வேண்டும் என்னும்
உட்கிடை யுடையவனாய் இங்ஙனம் வேண்டினானென்க. தாழ்ந்தான்; தாழ,
அங்ஙனமே அருள் செய்து நின்றான்; என விாத்துரைத்துக் கொள்க. (29)
ஆகச்
செய்யுள் - 1489
|