பக்கம் எண் :

தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 99



மலர்ச்சார்பினாலல்லாமல், அற்கு உற்ற குழற்கு - இருளை யொத்த
கூந்தலுக்கு, நாற்றம் இல்லை என்றான் - இயற்கையாக மணம் இல்லை
என்று கூறினான்; ஐயன் - இறைவன்.

     பொற்குற்ற, அற்குற்ற என்பவற்றில் குவ்வுருபை ஐயுருபாகத் திரித்து
உற்ற என்பதை உவமவுரு பாக்குக; குற்ற எனப் பிரித்து, பறித்த என்று
பொருளுரைப்பாரும் உளர். (103)

பங்கய முகமென் கொங்கைப் பதுமினி குழலோ வென்ன
அங்கது மனைத்தே யென்றா னாலவா யுடையான் றெய்வ
மங்கையர் குழலோ வென்ன வன்னது மந்தாரத்தின்
கொங்கல ரளைந்து நாறுங் கொள்கையாற் செய்கைத் தென்றான்.

     (இ - ள்.) பங்கயம் முகம் மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன
- தாமரை மலர்போன்ற முகத்தையும் மெல்லிய கொங்கையையுமுடைய
பதுமினி கூந்தலோ என்று வினவ, அங்கு அதும் அனைத்தே என்றான் -
அக்கூந்தலும் அத் தன்மைத்தே எனக் கூறினான்; ஆலவாய் உடையான்
தெய்வமங்கையர் குழலோ என்ன - திருவாலவாயுடைய இறைவன்
தேவமகளிரின் கூந்தலோ என்று வினவ, அன்னதும் - அக்கூந்தலும்,
மந்தாரத்தின் கொங்கு அலர் அளைந்து நாறும் கொள்கையால் -
மந்தாரத்தின் மணமுடைய மலர்களைக் கலந்து மணங்கமழுந் தன்மையினால்,
செய்கைத்து என்றான் - செயற்கை மணமுடையதே என்று கூறினான்.

     பத்தினிப் பெண்டிர் கூந்தலுக்கும், தேவமகளிர் கூந்தலுக்கும் இயற்கை
மணமுண்டென்பார் அவற்றை விதந்து வினவினார். அங்கதும் என்பதில்
அங்கு அசை; அதும் என முற்றுகரம் கெட்டது. செய்கைத்து - செய்யற்கை
யுடையது. (104)

பரவிநீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்கா ளத்தி
அரவுநீர்ச் சடையார் பாகத் தமர்ந்தஞா னப்பூங் கோதை
இரவினீர்ங் குழலு மற்றோ வெனவஃது மற்றேயென்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.

     (இ - ள்.) நீ பரவி வழிபட்டு ஏத்தும் - நீ துதித்து வழிபட்டு
வணங்கும், பரஞ்சுடர் - பரஞ்சோதியாகிய, திருக்காளத்தி அரவு
நீர்ச்சடையார் - திருக்காளத்தியிற் கோயில் கொண்டருளிய பாம்பையும்
கங்கையையும் அணிந்த சடையையுடைய இறைவரது, பாகத்து அமர்ந்த
ஞானப் பூங்கோதை - இடப்பாகத்தில் எழுந்தருளிய ஞானப் பூங்கோதையின்,
இரவின் ஈர் குழலும் அற்றோ என - இருளை யொத்த தண்ணிய கூந்தலும்
அத்தன்மைத்தோவென்று வினவ, அஃதும் அன்றேஎன்னா - அக்கூந்தலும்
அத்தன்மையை உடையதே என்று, வெருவிலான் - சிறிதும் அஞ்சாது,
விளைவு நோக்கான் சலமே முற்றச் சாதித்தான் - மேல் வருவதை அறியாமல்
முடியவும் சலஞ்சாதித்தான்.