I


100திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பொருந்திய சந்திரனையளாவிய, வெள் நிலா முற்றத்து இட்ட வெள்ளிய
நிலா முற்றத்தின்கண் அமைத்த, கண் படை அணைமேற் கொண்டு -
தூங்குமஞ்சத்தின்கண் இருந்து, காமனும் காமுற்று எய்த - காமவேளும்
விரும்பி வர,பல பண் பாடி- பல பண்களைப் பாடி, மைந்தர் ஆவியை -
ஆடவரின் உயிரை, பரிசில் கொள்வார் - பரிசிலாகக் கொள்வார் எ - று.

     நாற்றி - தொங்கவிட்டு; நால் என்பதன் பிறவினையாகிய நாற்று:
பகுதி. மதிய மென்பதில் அம் : சாரியை. நிலாமுற்றம - நிலவின்
பயன்கொள்ளுதற்கு மேனிலத்தமைத்த கூடம்; இஃது அரமியம் எனவும்
படும். கண்படை - உறக்கம்; கண்படு : பகுதி. மேற்கொள்ளல் - அமர்தல்,
உம்மை : உயர்வு சிறப்பு. காமம் என்பது ஈறு கெட்டுக் காம் என்றாகி,
உறு என்பதனுடன் சேர்ந்து வினையாயது. பண்பாடி என்றதற்கேற்பப்
பரிசில் கொள்வார் என்றார். ஆவி யெனவே உடலும் பொருளும்
கூறவேண்டாவாயின. (49)

குரும்பைவெம் முலையிற் சிந்து சாந்தமுங் குழலிற் சிந்தும்
அரும்பவிழ் மாலைத் தாது மளிநுகர்ந் தெச்சி லாகிப்
பொரும்பரிக் காலிற் போயர மாதர் மெய்யும்
இருங்குழற் காடுஞ் சூழ்போ யியன்மணம் விழுங்கு மன்னோ.

     (இ - ள்.) குரும்பை - தென்னங் குரும்பைபோன்ற, வெம் -
விருப்பந்தருகின்ற, முலையில் - கொங்கைகளினின்றும், சிந்து சாந்தமும் -
உதிர்ந்த சந்தனமும், குழலில் சிந்தும் - கூந்தலினின்றும் உதிர்ந்த, அரும்பு
அவிழ்மாலைத்தாதும் - முகைவிரிந்த மாலையின் மகரந்தமும், அரும்பு
அவிழ்மாலைத்தாதும் - முகைவிரிந்த மாலையின் மகரந்தமும், அளிநுகர்ந்து
எச்சிலாகி - வண்டுகளால் உண்ணப்பட்டு எச்சிலாகி பொரும் பரி -
போர்செய்யும் குதிரைகளின், காலில் தூள் ஆய் - காலினால் தூளாகி,
போய் - மேலெழுந்துபோய், அரமாதர் - தேவமாதரின், மெய்யும் -
உடலையும், இரும் குழல காடும் - நீண்ட கூந்தலாகிய காட்டையும்,
சூழ்போய் - சூழ்ந்து, இயல் மணம் விழுங்கும் - (அவற்றின்) இயற்கை
மணத்தை மறைக்கும் எ-று.

     வெம்மை - விருப்பம். இருமை - கருமையுமாம். இவராற் கழிக்கப்
பட்டு இழி வெய்திய சாந்தமும் தாதும் தேவமாதரின் மணத்தையும்
மறைக்கும் எனக் கூறி, இங்குள்ள பரத்தையரின் சிறப்பினை விளக்கு
வாராய், சிந்து சாந்தமும் தாதும் எச்சிலாகிக் காலிற் றூளாய்ப் போய்
விழுங்கும் என்றார். விழுங்குமென்றது, புலப்படாமற் செய்யும் என்றபடி.
தேவமகளிர்க்கு இயற்கையில் மணமுண்டென்றார். எச்சில், எஞ்சு
என்பதனடியாகப் பிறந்தது. துகள் என்பது தூள். என மருவிற்று. மன்,
ஓ : அசை. (50)

ஆலவா யுடையா னென்று
     மங்கயற் கண்ணி யென்றுஞ்
சோலைவாழ் குயிலி னல்லார்
     சொல்லியாங் கொருங்கு சொல்லும்