I


திருநகரச் சிறப்பு101



பாலவாங் கிளிகள் பூவை
     பன்முறை குரவ னோதும்
நூலவாய்ச் சந்தை கூட்டி
     நுவன்மறைச் சிறாரை யொத்த.

     (இ - ள்.) சோலைவாழ் குயிலின் நல்லார் - சோலையில் வாழும்
குயில்போன்ற பரத்தையர், ஆலவாய் உடையான் என்றும் - திருவால
வாயில் வீற்றிருக்கும் உடையானே என்றும், அங்கயற்கண்ணி என்றும் -
அங்கயற் கண்ணியே என்றும், சொல்லியாங்கு - சொல்லினாற் போல,
ஒருங்கு சொல்லும் - ஒரு சேரச் சொல்லுகின்ற, பால் அவாம் கிளிகள் -
பாலை விரும்புகின்ற கிளிகளும், பூவை - நாகணவாய்ப் பறவைகளும்,
குரவன் பன்முறை ஓதும் - ஆசிரியன் பலமுறை ஓதுகின்ற, நூல் அவாய் -
மறையைய விரும்பி, சந்தை கூட்டி நுவல் - சந்தை கூட்டிச் சொல்லுகின்ற,
மறைச் சிறாரை ஒத்த - பார்ப்பனச் சிறுவர்களை ஒத்தன எ - று.

     உலகுயிரெல்லாம் இறைவனுக்கு உடைமையாகலின் அவன்
உடையானெனப்படுவன்; ஆலவாயை உடையான் என்னலுமாம். விளியாக
வன்றிப் பெயராகவும் கொள்ளலாகும். நல்லார் சொல்வது இயல்பாகச்
சொல்லுதலும், பயிற்றுவித்தலும் ஆம். ஆங்கென்னும் உவமப் பொருட்டாய
இடைச்சொல், சொல்லி என்பதனுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றது.
இங்குள்ள பரத்தையரும் அம்மையப்பர் திருநாமங்களையே கூறும் பத்திமை
யுடையாரென்றார். நூலென்றது, ஈண்டு மறையீனை. சந்தை - பண்ணுடன்
ஓது முறைமை.

"நந்தி நாம நமச்சி வாயவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாச மறுக்கவல் லார்களே"

என்னும் தமிழ்மறையுங் காண்க. அவாவும், அவாவி என்பன அவாம்,
அவாய் எனத் திரிந்தன. கிளிகள் பூவை என்புழி உம்மைகள் விரிக்க.
ஒத்த : அன்பெறாத பலவின்பால் முற்று. (51)

ஒளவிய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்துந்
திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுந் தம்மிற்
கௌவிய நீர வாகிக் காளையர் செவிக்கா லோடி
வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே.

     (இ - ள்.) ஒளவியம் - பொறாமையுடைய, மதர் - மதர்த்த, வேல்
கண்ணார் - வேல்போலுங் கண்களையுடைய பரத்தையர், அம் தளிர் விரல்
நடாத்தும் - அழகிய தளிர்போன்ற விரல்களால் உண்டாக்குகின்ற, திவ்விய
நரம்பும் - திப்பிய நரம்பின் ஒலியும், செவ்வாய் - (அவரது) சிவந்த
வாயினின்றும் வருகின்ற, தித்திக்கும் எழாலும் - மதுரமாகிய மிடற்றொலியும்,
தம்மில் கௌவிய - தம்முட் கலந்த, நீர வாகி - தன்மை யுடையவாய்