I


திருநகரச் சிறப்பு105



அருந்தின ரருந்திச் செல்ல வருந்துகின் றாரு மாங்கே
இருந்தினி தருந்தா நிற்க வின்னமு தட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி வித்தெல்லாம் வயலில் வீசி
வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார்.

     (இ - ள்.) அருந்தினர் - உண்டவிருந்தினர், அருந்திச்செல்ல -
உண்டு செல்ல, அருந்துகின்றாரும் - உண்கின்றவர்களும், ஆங்கே -
முன்னுண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தாநிற்க - இருந்து
மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும் இன் அமுது அட்டு - பின்பும்
இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவுநோக்கி - வரக்கடவராகிய
விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் - விதை
அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி
நோக்கும் - மழையை வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் -
ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் - வருந்தி நிற்பார்
(அவ் வேளாளர்) எ - று.

     இடையறாது விருந்தோம்புதல் தோன்ற மூன்று காலத்தானுங்
கூறினார்.

"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு"

என்னுந் திருவள்ளுவப்பயனுங காண்க. விருந்தினர் வரவு தாழ்ப்பின்
பாடிநிற்பா ரென்க. விருந்தோம்பற்கண் அவருக்குள்ள ஆர்வ மிகுதி
கூறியவாறு. (56)

வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும்
ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்கப் பாடுந்
தானமுங் கொடையு மன்பும் வரிசையுந் தகைசா னண்பும்
மானமுந் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்.

     (இ - ள்.) வானமும் திசையும் - வானுலகத்தினும் எட்டுத்
திக்குக்களிலும், பொங்கும் புகழ்மையும் - பரந்து விளங்கும் புகழும், வானம்
பேணும் ஞானமும் - வீட்டுலகை விரும்புகின்ற மெய்யுணர்வும், பொறையும்
- பொறையுடைமையுயம், குன்றா நன்றியும் - குன்றாத நன்றியும்,
ஊக்கப்பாடும் - உரனுடைமையும், தானமும் கொடையும் அன்பும் வரிசையும்
- தானமும் ஈகையும் அன்பும் தகுதியும், தகைசால் நண்பும் மானமும் -
பெருமை மிக்க நட்பும் மானமும் (ஆகிய இவைகளை), தவம் செய்து ஈன்ற
மகவுபோல் - தவங்கிடந்து பெற்ற மகவை வளர்ப்பது போல், வளர்க்க
வல்லார் - வளர்ப்பதில் வல்லவர்கள் (அவ்வேளாளர்) எ - று.

     வானமென்றது ஈண்டு வீட்டுலகத்தை; 'வையத்தில் வான நணிய
துடைத்து' என்புழி வானம் வீட்டுலக மென்னும் பொருளாதாதலைப்
பரிமேலழகர்
உரையா னறிக. விண்ணுலகத்தவரும் விரும்பும் மெய்யுணர்வு
என்றுரைப்பாருமுளர். குன்றா நன்றி - நன்றிகுன்றாமை - தானம்
தக்கார்க்களிப்பது. தானம் சிறப்பும், கொடை பொதுவு மாகும். வரிசை -