தகுதி. பெருமை; 'வரிசையானோக்கின்'
எனவும் 'வரிசையறிதலோ வரிதே'
எனவும் வருவன காண்க. நண்பு - நட்புத் தன்மை. மானம் - நிலையிற்
றாழாமையும், தாழ்வு வந்துழி உயிர் வாழ மையும் ஆம். குறிக்கொண்டு
பேணி வளர்ப்பாரென்பார் 'தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க
வல்லார்' என்றார். புகழ்மை, மை : பகுதிப்பொருள் விகுதி;
புகழ்த்தன்மையுமாம். (57)
வணிகர்
வீதி |
புல்லியோர்
பண்டங் கொள்வார்
வினவினப் பொரு*டம் பக்கல்+
இல்லெனி னினமா யுள்ள
பொருளுரைத் தெதிர்ம றுத்தும்
அல்லதப் பொருளுண் டென்னின்
விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ்
சொல்லினு மிலாபங் கொள்வார்
தொன்மர பிருக்கை சொல்வாம். |
(இ
- ள்.) கொள்வார் - வாங்குவார், புல்லி - வந்து, ஓர் பண்டம்
வினவின் - ஒரு பொருள் உண்டோ என வினவுவராயின், அப்பொருள்
தம் பக்கல் இல் எனின் - அந்தப் பொருள் தம்மிடத்து இல்லையாயின்,
இனமாய் உள்ள பொருள் உரைத்து - அதற்கு இனமாயுள்ள பொருள்
உண்டு என்று கூறுவதனால், எதிர்மறுத்தும் - கேட்ட பொருள் இல்லை
என்றும், அப்பொருள் உண்டு என்னின் - அவ்வாறின்றி அந்தப் பொருள்
தம்மிடத்திருந்ததாயின், விலைசுட்டி அறுத்தும் - விலையை வரையறுத்துக்
கூறியும், நேர்ந்தும் - கொடுத்தும், சொல்லினும் இலாபம் கொள்வார் -
பொருளாலன்றிச் சொல்லானும் இலாபத்தைப்பெறுகின்ற வணிகர்களின்,
தெல்மரபு - பழமை தொட்டு வருகின்றமரபின், இருக்கை சொல்வாம் -
வீதியின் பெருமையைக் கூறுவாம் எ - று.
"தம்பா லில்ல தில்லெனி னினனாய்
உள்ளது கூறி மாற்றியுய முள்ளது
சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே" |
என்னும் நன்னூற்
சூத்திரப் பொருள் பற்றி ழெுந்தது இச்செய்யுள்.
பயறுளதோ என்று வினயீனார்க்கு அது தம்பக்கல் இல்லையாயின்
இனனாயுள்ள பிறிதுபொருளைச் சுட்டி உழுந்து உளது என்றும், பயறு
உளதாயின் இத்துணைப் பயறு உளது, இன்ன விலையிற்று என்றும் கூறுவர்
என்பது கருத்து. இங்ஙனம் கூறுதல் வினாவும் விடையுமாகிய சொற்கள்
பல்காது சுருங்குதற் பொருட்டென்க. இது பண்டைத் தமிழ் வாணிகரது
முயற்சித்திறனை விளக்குதற்கு உறு சான்றாகும். 'விலைசுட்டி யறுத்து
நேர்ந்தும்' என்பதற்கு, பொருளைச் சுட்டியும் விலையை வரையறுத்தும்
என்றும் கூறலுமாகும். 'அறுத்து நேர்ந்து' என்பதற்கு வரையறுத்துக்
கூறுதலால் அப்பொருள் உளதென்பதனை உடன்பட்டு என்றுரைத்தலுமாம்.
(பா
- ம்.) * வினவின பொருள். +பக்கம்.
|