விலை கூறுமிடத்து இலாபத்தை
வெளிப்படையாகச் சொல்லுதலுங் கொள்க.
'பல் பண்டம் பகர்ந்து வீசும்' என்னும் பட்டினப்பாலையடிக்கு
நச்சினார்க்கினியர் இப்பொருள் கூறியிருத்தல்
காண்க.
"எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்" |
"அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்" |
என்னும் தொல்காப்பியச்
சூத்திரங்களும், அவற்றின் உரைகளும் நோக்கி
அவற்றோ டிதனிடையுள்ள ஒற்றுமை வேற்றுமை காணற் பாலன. உம்மை :
எச்சப்பொருட்டு. (58)
[கலிநிலைத்துறை]
|
நீல வேதிமேற்
பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின்
கால வாலிய வைரவாட் கானிரைத் தும்பர்க்
கோல வானிலாச் *சொரிமணி குயிற்றிவெண் மாடம்
மாலை போல்வகுத் தியற்றின பீடிகை மறுகு. |
(இ
- ள்.) பீடிகை மறுகு- கடை வீதிகளில், நீலவேதிமேல் - நீல
மணியாலாகிய திண்ணையின்மேல், நிழல் பளிங்கினால் சுவர் நிறீஇ - ஒளி
பொருந்திய பளிங்கினாற் சுவரை நிறுத்தி, வாலியவாள் - வெள்ளிய
ஒளியினையுடைய, வைரக்கால் - வைரத்தூண்களை, மின்கால - ஒளிவீச,
நிரைத்து - வரிசையாக நட்டு, உம்பர் - மேலிடத்தில், கோலம் - அழகிய,
வால்நிலாச் சொரிமணி - வெள்ளிய நிலாவைப் பொழிகின்ற சந்திரகாந்தக்
கற்களை, குயிற்றி - பதித்து, மாலைபோல் - மலர் மாலையைப்போல்,
வெண்மாடம் வகுத்து இயற்றின - வெள்ளிய மாடங்கள் வரிசையாக
அமைத்துக் கட்டப்பட்டன எ - று.
இயற்றின
: படுசொல் தொக்குநின்ற செயப்பாட்டுவினை. (59)
திரைய ளிப்பவுந்
திரைபடு தீம்புனல் வேலிக்
கரைய ளிப்பவுங் கரையிலா னிரை+படு கானத்
தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும்
வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம். |
(இ
- ள்.) மாடம் - பண்டசாலைகள், திரை அளிப்பவும் - கடல்
தரும் பொருள்களையம், திரைபடு தீம்புனல் வேலி - அலைகளையுடைய
இனிய நீரினை வேலியாகவுடைய, கரை அளிப்பவும் - மருத நிலம் தரும்
பொருள்களையும், கரை இல் - அளவில்லாத, ஆன் நிரைபடு - பசு
மந்தைகளையுடைய, கானத்தரை அளிப்பவும் - முல்லை நிலம் தரும்
பொருள்களையும், தரை கிழித்து - புவியைப் பிளந்து, விண் ஊன்றி
தாங்கும் - வானத்தை ஊன்றித் தாங்குகின்ற, வரை அளிப்பவும் - மலை
தரும் பொருள்களையும், வாங்கி வாய்மடுப்பன - வாங்கித் தம்மிடத்து
நிறைப்பன எ - று.
(பா
- ம்.) * வாணிலாச். +கரையிலா நிரை.
|