திரை
: அதனையுடைய உடலுக் காயிற்று. சூழ்ந்திருத்தலின் புனலை
வேலி யென்றார் - கரை - கரைகளையுடைய மருதம். கானத் தரை -
கானமாகிய தரை; முல்லை நிலம். விண்ணினைத் தாங்குவது போன்
றிருத்தலின், 'விண்டாங்கும்' என்றார். மாடம் என்றது பண்ட சாலைகளை.
அளிப்ப, என்பன : வினையாலணையும் பெயர். குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் என்னும் முறை எதிராக உரைக்கப்பட்டது நான்கு திணையிலும்
உண்டாம் பொருள்கள் இவை என்பதனை,
"அகில்கறி கோட்ட மொடுதக் கோலம்
குங்கும மைந்தும் மலைபடு திரவியம்" |
"அரக்கிறா லின்றே னணிமயியற்
பீலி
நாவி கான்படு திரவிய மைந்தே" |
"செந்நெல் செவ்விள நீர்சிறு
பயறு
கன்னல் கதலி யெனப்பெயர் பெற்ற
ஐந்து நன்னாட் டமைந்த திரவியம்" |
"பவள முத்துச் சங்கொக் கோலை
உப்புக் கடல்படு திரவிய மைந்தே" |
என்னும் பிங்கலந்தைச்
சூத்திரங்களா னறிக. (60)
கரிய கம்பலக்
கிடுகின்மேற் கதிர் விடு பவளத்
தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும்
பரிய நித்தில மணிவட மரகதப் பசுந்தார்
விரிய விட்டன விந்திர வின்னிரை யனைய. |
(இ
- ள்.) கரிய கம்பலக் கிடுகின்மேல் - கரிய கம்பலம் வேய்ந்த
சட்டத்தின் மேல், விரிய விட்டன - விரியும்படி விட்டனவாகிய, கதிர் விடு
பவளத் தெரியல் - ஒளிவீசுகின்ற பவளமாலைகளும், பொன் அரி மாலிகை
- பொன்னால் அரிந்து செய்த மாலைகளும், தெள் நிலாச் சொரியும் -
தெளிந்த நிலவைப் பொழிகின்ற, பரிய நித்திலமணிவடம் - பெரிய
முத்துமாலைகளும், மரகதப் பசுந்தார் - பசிய மரகத மாலைகளும், இந்திர
வில் நிரை அனைய - வரிசையாகவுள்ள இந்திர வில்லுகளை ஒத்தன
எ - று.
மாலைகள்
விளங்கித் தோன்றுதற்குக் கரிய கம்பலத்தின்மேல் இட்டு
வைப்பர்; கம்பலம் முகிலையும், மாலைகள் இந்திரவில்லையும் போலுமென்க.
பலநிற முடைமையின் இந்திரவில் உவமம். (61)
நாள்க ளுங்குளிர்
திங்களு ஞாயிறு மேனைக்
கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு
வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர்
ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய. |
|