I


திருநகரச் சிறப்பு109



     (இ - ள்.) நாள்களும் - நாண்மீன்களும், குளிர் திங்களும் -
குளிர்ந்த மதியும், ஞாயிறும் - இரவியும், ஏனைக்கோள்களும் - மற்றைக்
கோள்களும், குளிர்விசும்பு ஒரீஇ - குளிர்ந்த வானத்தினின்று நீங்கி,
குடிபுகுந்தாங்கு - குடி புகுந்தாற்போல, வாள்கிடந்து - ஒளி தங்கி,
இராப்பகல் ஒளி மழுங்ககலால், ஆள் கலம் பகர் வணிகர் பீடிகை -
அணியும் கலன்களை விற்கின்ற வணிகர் கடைவீதிகள், துறக்க நாடு
அனைய - வானுலகை ஒத்தன எ - று.

     நாள் - நாண்மீன், நட்சத்திரம். ஏனைக் கோள்களாவன : -
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன. இராகு கேதுக்கள்
சாயை யாதலின் ஈண்டு அவை கொள்ளற் பாலனவல்ல. இரவிலும் பகலிலும்
தோன்றும் அனைத்தொளியும் ஒருங்கு தொக்காற் போலுதலின் அவ்வொளி
இரவிலும் பகலிலும் தனித்தனியுள்ள ஒளிகளை மழுங்கச் செய்வதாயிற்று;
அதனால் இரவு பகல் என்னும் பொழுது வேற்றுமை புலனாகாமையால்
அவ்வேற்றுமையில்லாத துறக்க நாட்டினைப் போலும் என்றார். ஆளுதல் -
ஈண்டு அணிதல். (62)

பன்னி றத்தபல் பெருவிலைப் பட்டெலா மவண
அன்ன பட்டின்மேம் படுவிலைப் பருத்தியு மவண
எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர்
மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண.

     (இ - ள்.) பல் நிறத்த - பல நிறத்தினையுடைய, பெரு விலை -
பெரிய விலையினையுடைய, பல் பட்டு எலாம் அவண - பலவகையான
பட்டாடைகள் அனைத்தும் அவ்விடத்துள்ளன; அன்னபட்டின் -
அத்தன்மையவான பட்டாடைகளின், மேம்படு விலை - மேம்பட்ட
விலையினையுடைய, பருத்தியும் அவண - பருத்தி நூலாடைகளும்
அங்குள்ளன; எந்நிலத்து அரும்பொருள் (எலாம்) - எந்த நாட்டினுங்
கிடைத்தற்கரிய பொருள்கள் எல்லாமும், பதினெழு புலவணிகர் மன்
இருக்கையும் - (தமிழ் ஒழிந்த) பதினேழு தேயவணிகர்களின் நிலைபெற்ற
உறைவிடங்களும், பெறல் அரும் வளன் எலாம் பெறுதற்கரிய (பிற)
செல்வங்கள் எல்லாமும், அவண - அக் கடைவீதிகளிலுள்ளன எ - று.

     அவண : பலவின்பாற் குறிப்பு முற்று. பட்டு, பருத்தி யென்பன
அவற்றானாய ஆடைகளுக்கு ஆகுபெயர். எந்நிலத்தும் என உம்மை
விரிக்க. எந்நிலத் தரும் பொருள் என்பதற்கு எந்நாட்டினுமுள்ள அரிய
பொருள்கள் என்று கொள்ளுதலுமாம். அரும் பொருள் - கருப்பூரம்
முதலியன; பட்டினப்பாலையில் 'அரியவும்' என்பதற்குச் 'சீனம் முதலிய
இடங்களினின்றும் வந்த கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதலியனவும்' என
நச்சினார்க்கினியர் உரை கூறியிருப்பதுங் காண்க. பொருளும், எலாமும்
என்னும் உம்மைகள் தொக்கன. (63)

மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை
உரல்கள் வெள்ளியா லடுப்பகில் விறகுலை பனிநீர்
அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும்
எரிபொ னாலிழைத் தாடுப விவர்சிறு மகளிர்.