எரிக்கு றும்பொறி யனையசெம் மணிசுட ரெறிபொன்
வரிச்சு ரும்புநேர் மரகத முத்துவாள் வைரந்
தெரிப்ப ருந்துகிர் சிந்தின செல்லுநா ளொன்றுக்
கரிப்பர் கையகப் படுவன வாயிரத் திரட்டி. |
(இ
- ள்.) எரிக் குறும்பொறி அனைய - நெருப்பின் சிறிய பொறியை
யொத்த, செம்மணி - சிவந்த மாணிக்கங்களும், சுடர் எறி பொன் - ஒளி
வீசுகின்ற பொன்னும், வரிச் சுரும்பு நேர் மரகதம் - கீற்றுக்களையுடைய
வண்டினை யொத்த மரகதங்களும், முத்து - முத்துக்களும், வாள் வைரம் -
ஒளிபொருந்திய வைரங்களும், தெரிப்பு அரும் துகிர் - விலை தெரிந்து
சொல்லுதற்கரிய பவளங்களுமாக, சிந்தின - சிதறிக் கிடக்கின்றவை,
அரிப்பர் செல்லு நாள் ஒன்றுக்கு - அரித் தெடுப்போர் செல்லுகின்ற
ஒவ்வொரு நாளும், கை அகப்படுவன - (அவர்) கையிற் கிடைப்பன,
ஆயிரத்து இரட்டி - (வகைக்கு) இரண்டாரிங்களாம் எ - று.
தெரிப்பு
- தெரிந்து சொல்லுதல். நாளொன்றுக்கு - நாளொன்றில்.
சிந்தின, அகப்படுவன : வினையாலணையும் பெயர்கள். ஆயிரத் திரட்டி
யென்றது எண்ணிறந்தன வென்றபடி. (66)
பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினென்
தேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் றூய
மாயை காரிய வொலியன்றி வான்முதற் கருவின்
ஆய காரிய வோசையே யாய்க்கிடந் தன்றே. |
(இ
- ள்.) பாய தொன்மரம் - பரந்த ஆலமரத்தில், பறவைபோல் -
(பயன்கொள்ளுதற் பொருட்டுக் கூடிய) பறவைகளைப்போல், பயன்
கொள்வான் - பயனைக் கொள்ள வந்த, பதினெண்தேய மாந்தரும் -
பதினெண்மொழிகள் வழங்கும் நிலத்திலுள்ள மக்களும், கிளந்தசொல்
திரட்சிதான் - பேசுகின்ற சொற்றொகுதிதான், தூய மாயை காரிய ஒலி
அன்றி - சுத்த மாயையின் காரிய ஒலியாக அல்லாமல், வான் முதல்
கருவின் ஆய - வானாயமுதற் காரணத்தினாலுண்டாகிய, காரிய ஓசையே
ஆய்க்கிடந்தன்று - காரிய ஓயையேயாகி அமைந்தது எ - று.
தொன்மரம்
- ஆலமரம். பயன் கொள்வான் என்பது பறவைக்கும்
கூட்டப்பட்டது. பதினென் தேயமாவன - செந்தமிழ் கொடுந் தமிழ்
என்றிருபகுதியாகிய தமிழ் வழங்கு நிலமும், சிங்களம் முதலிய ஏனை
மொழிகள் வழங்கு நிலங்களுமாம். தமிழொழிந்த பதினேழு நாடுகள்
இவை யென்பதனை,
"சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே" |
என்னுஞ் செய்யுளலறிக.
சுத்தமாயையின் காரியவொலிாவது பொருள்
பயக்கும் எழுத்து வடிவான வொலி. ஆகாய காரிய வோசை யாவது
|