பொருள் பயவாது சதத
மாத்திரையாயிருப்பது. வான் முதற்கருவின்
என்பதற்கு ஆகாய முதலிய ஐம்பூத காரணங்களால் எனப் பொருள்
கூறுவாறு முளர்; ஏனைப் பூதங்களிலும் வானின் கலப்பினாலயே
ஓசையுயண்ாமாகலின் அங்ஙனங் கூறுதல்வேண்ா வென்க. ஒலி, ஓசை
என்பன ஒரே பொருளில் வழங்குவதுண்ாயினும், அவை முறையே எழுத்து
வடிவையும், எபத்து வடிவில்லாத சத்தத்தையும் உணர்த்துஞ் சொற்களாக
ஆன்றோரால் ஆளப்படுகன்றன; திருநாவுக்கரசுகள் தேவாரத்தில்
'ஓசை
யொல யுண்மையைப் புலப்பத்தா நிற்கும். இச்செய்யுளில் 'மாயை காரிய
வொலி' என்றும், 'வான் முதற் கருவினாய காரிய வோசை' என்றும் கூறியது
இவ்வேற்றுமை குறித்தே யாகும். பலமொழிகளும் ஒருங்கு பேசப்படுங்கால்
அவை மயங்குதலுற்று ஒரு மொழியின் வடிவுந் தோன்றாமையால்
ஆகாயகாரிய வோசையேயாயிற்று என்றார்.
"மூசுதே னிறாலின் மூச மொய்திரை
யியம்பி யாங்கும்
ஓசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகா" |
என்னும் சிந்தாமணிச்
செய்யுளோடு இதனை ஒப்பு நோக்கு. ஓசையே
என்பதில் ஏ : தேற்றம். கிடந்தன்று - கிடந்தது. ஏ : அசை. (67)
ஒழிவில்
வேறுபல் பொருளுமே முலோகமும் பிறவும்
வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்துத்
தழுவி வேண்டினர் தாங்கொளத் தக்கவா பகரா
அழிவி லாமறை போன்றன வாவண வீதி. |
(இ
- ள்.) ஒழிவு இல் வேறுபல் பொருளும் - நீங்குத லில்லாத
பலவேறு வகையான பொருள்களையும், ஏழு உலோகமும் - ஏழு
உலோகங்களையும், வழு இல் வேறு பல் கலைகளும் - குற்றமில்லாத
பலவேறு வகைப்பட்ட கலைகளையும், பிறவும் - பிறவற்றையும், மரபுளி -
முறையால், வகுத்து - வகைப்படுத்தி, தழுவி வேண்டினர் தாம் கொள -
அணுகிநின்று விரும்பியவர்கள் கொள்ளும்படி, தக்கவா பகரா - தக்கவாறு
பகர்ந்து, ஆவண வீதி - கடைவீதிகள், அழிவு இலா மறைபோன்றன -
அழிவில்லாத வேதங்களைப் போன்றன எ - று.
கடை
வீதிக்கியைய உலோகம் என்பதற்குப் பொன் முதலியன
வென்றும், கலைகள் என்பதற்கு ஆடைகள் என்றும், கொளத்தக்கவா பகரா
என்பதற்கு வாங்குமாறு விற்று என்றும், மறைக்கியைய அவற்றுக்கு முறையே
பூலோகம் முதலியன வென்றும், அறுபத்து நாற்கலைகள் என்றும்,
பக்குவத்திற்கேற்ப ஏற்றுக்கொள்ளுமாறு கூறி யென்றும் பொருள் கொள்க.
பொன் முதலிய ஏழு உலோகங்கள் இவையென்பதனை,
"பொன்னும் வெள்ளியும் செம்பும்
இரும்பும்
அன்ன ஈயமும் ஐவகை யுலோகம்" |
"தராவொடு கஞ்சத் தானுங் கூட்டி
எழுவகை யுலோகம் ஐவகை யலோகம்" |
என்னும் திருவாகரச் சூத்திரங்களா னறிக. மரபுளி
- மரபால்;
உளி : மூன்றன் பொருள்படுவதோ ரிடைச்சொல். (68)
|