(இ
- ள்.) தரங்க வேலைகள் தம்மையே - அலைகளையுடைய
கடல்களையே, தாள் உறப் பிணித்து - காலை இறுகக் கட்டி, துரங்கமா
என - குதிரைகளாக, தொகுத்த - தொகுக்கப் பெற்றுள்ள, மந்துரை பல -
பரிச்சாலைகள் பல; அருவி இரங்கும் - அருவி ஒலிக்கின்ற, ஓர் அறிவு
உயிர் - ஓரறிவுயிராகிய, வரை யாவையும் பெயர்த்து - மலைகள்
அனைத்தையும் தோண்டி, மரம் கொல் யானைபோல் - மரங்களை
முறிக்கின்ற யானைகளாக, பிணித்த கூடம் பல - கட்டப்பட்டுள்ள யானைக்
கூடங்கள் பல உள்ளன (அவ்வீதியில்) எ - று.
தரங்கம்
புரவிக்கு உவமம். புரவியின் மிகுதி கூறுவார் வேலைகள்
தம்மையே தொகுத்த என்றார். துரங்கமா - துரங்கமாகிய மா : இரு
பெயரொட்டு. மதத்திற்கு அருவியும் யானைக்கு மலையும் உவமம்.
வளர்தலுண்மையின் ஓரறிவுயிர் என்றார். மரம் - கட்டுத் தறியுமாம்.
யானைபோல் - யானைகளாக. தற்குறிப்பேற்றம். மன், ஓ : அசை. (71)
மழுக்கள் வச்சிரங் கார்முகம் வாளிமுக் குடுமிக்
கழுக்கள் சக்கர முடம்பிடி கப்பண நாஞ்சில்
எழுக்க ணாந்தகம் பலகைதண் டிவைமுதற் படையின்
குழுக்க ளோடிகல் விந்தைவாழ் கூடமும் பலவால்.
|
(இ
- ள்.) மழுக்கள் வச்சிரம் கார்முகம் வாளி - மழுக்கள்
வச்சிரங்கள் வில் அம்பு, முக்குடுமிக் கழுக்கள் - முத்தலைச் சூலங்கள்,
சக்கரம் உடம்பிடி - திகிரி கைவேல், கப்பணம் - இருப்பு நெருஞ்சின்
முள், நாஞ்சில் - கலப்பை, எழுக்கள் - வளைதடிகள், நாந்தகம் - வாள்,
பலகை - கேடகம், தண்டு இவை முதல் - தண்டம் இவை முதலான,
படையின் குழுக்களோடு - படைக்கலக் கூட்டத்தோடு, இகல் விந்தை வாழ்
கூடமும் பல - வெற்றிக்குரிய கொற்றவை வாழ்கின்ற கூடங்களும்
பலவுள்ளன (அவ்வீதியில்) எ - று.
கார்முகம்
- வில்; போருக்குரியது என்னும் பொருளுள்ள தத்தி
தாந்தம். உடம்பிடி - கைவேல். கப்பணம் - யானை நெருஞ்சின் முள்
வடிவாக எஃகினாற் செய்யப்படுவது. விந்தை - துர்க்கை. கொற்றவை.
படைக்கலக் கொட்டிலில் விந்தைவாழு மென்றார். ஆல் : அசை. (72)
தொளைய கல்லைமா லெனக்கொண்டு சுழற்றியும் செந்தூள்
அளையும் யானைபோற் பாய்ந்துமல் லாற்றியு மாற்றல்
விளைய வாளொடு கேடகம் வீசியும் வென்றி
இளைய ராடமர வயில்வன வெண்ணிலாக் கூடம். |
(இ
- ள்.) தொளைய கல்லைக் கொண்டு - தொளையையுடைய
கல்லை ஏந்தி, மால் எனச் சுழற்றியும் - திருமால் திகிரியைச் சுழற்றி
னாற்போல் சுழற்றியும், செம் தூள் அளையும் யானைபோல் - செம்
புழுதியிற் படிந்த யானைகளைப்போல, பாய்ந்து மல் ஆற்றியும் - செந்
நிலத்திற் பாய்ந்து மற்போர் செய்தும், ஆற்றல் விளைய - வலிமை முதிர
வாளொடு கேடகம் வீசியும் - வாட்படையோடு பரிசையும் பற்றி (ஒருவர்மே
லொருவர்) வீசியும், வென்றி இளையர் - வெற்றியையுடைய அரசிளங்
குமரர்கள், ஆடு அமர் பயில்வன - வெற்றி பொருந்திய போர்த்தொழி்ல்
|