I


48திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) கற்றை வை களைந்து - திரளாகிய வைக்கோலை நீக்கி
தூற்றி - பதர்போகத் தூற்றி, கூப்பி - (நெல்லைப்) பொலிகளாகக் குவித்து,
ஊர்க்காணித் தெய்வம் - கிராம தேவதைகளுக்கும், அற்றவர்க்கு -
வளியோர்களுக்கும், அற்றவாறு ஈந்து - வரையறுத்தபடி கொடுத்து, அளவை
கண்டு - அளந்து, கொற்றவர் - மன்னர், கடமை - இறைப்பொருளாக,
ஆறில் ஒன்றுகொள்ள - ஆறில் ஒருகூறு கொள்ள, பண்டியில் கொடுபோய்
- (மிகுதியைப்) பண்டிகளிற் கொண்டுபோய், தென்னாடு உற்றவர் -
தென்புலத்தாரையும், சுற்றம் - ஒக்கலையும், தெய்வம் - தேவரையும்,
விருந்தினர்க்கு - விருந்தினரையும், ஊட்டி - உண்பித்து, உண்பார் -
(அந்நாட்டினர்) தாமும் உண்பார் எ - று.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை"

என்னும் திருக்குறளும், "பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற்
படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்றிசை யாகலின்
‘தென்புலத்தார்’ என்றார். தெய்வமென்பது சாதியொருமை. விருந்தென்பது
புதுமை. அஃதீண்டாகு பெயராய்ப் புதியராய் வந்தார் மேல்நின்றது. அவர்
இருவகையர், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற்
குறியாது வந்தாருமென. ஒக்கல் - சுற்றத்தார். எல்லா அறங்களும்
தானுளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னையோம்பலும்
அறனாயிற்று . . . . . . . அரசனுக் கிறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று;
இவ் வைம்புலத்திற்கு ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக" என்று
பரிமேலழகர் விளக்கிய உரையும் இங்கே அறியற்பாலன. அற்றவர்க்கு,
விருந்தினர்க்கு என்னும் நான்கனுருபுகள் ஏனையிடத்தும்
சென்றியையும். (28)

சாறடு கட்டி யெள்ளுச் சாமைகொள் ளிறுங்கு தோரை
ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை யேனல்
வேறுபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும்
ஏறொடு பண்டி யேற்றி யிருநிலம் கிழிய வுய்ப்பார்.

     (இ - ள்.) சாறு அடுகட்டி - கருப்பஞ்சாற்றைக் காய்ச்சிய வெல்லம்,
எள்ளு சாமை கொள் இறுங்கு தோரை - எள் சாமை கொள் சோளம்
மலைநெல், ஆறு இடும்மதம் - வெள்ளம்போற் சொரிகின்ற
மதத்தினையுடைய, மால் - பெரிய, யானைப்பழுக் குலை அவரை -
யானையின் விலா வெலும்புபோலும் காயினையுடைய குலைகளையுடைய
அவரை, ஏனல் - தினை, வேறுபல் பயறோடு - வேறு வகைப்பட்ட பல
பயறுகளோடு, இன்னமற்றும் - இத்தன்மைய பிறவுமாகிய, புன்னில விளைவு
- புன்செயில் விளைந்தபொருள்களை, ஏறு ஒடுபண்டி ஏற்றி - எருதுகளிலும்
பண்டியிலும் ஏற்றி, இருநிலம் கிழய உய்ப்பார் - பெரிய பூதி கிழியும்படி
கொண்டுபோவார் எ - று.

     யானையின் பழுப்போல் அவரையின்கா யிருத்தலை, ‘பொருவில்
யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலை யவரை’ எனப் பிறருங்
கூறியிருத்தல் காண்க. யானையின் பழுவெலும்பின் வரிசைபோன்ற
வாழைக்குலை என்பாரும், யானைமுகம்போற் பழுக்கத்தக்க வாழைக்
குலை என்பாரும் உயர். இறுதியிற் கூறியபொருளுக்குக் ‘கருங்கதலிப்