I


திருநகரச் சிறப்பு117



     தேரினும் - தேர்க் குதிரையினும். தள்ளித் துள்ளல் - மிக்குத்
துள்ளல். பாண்டில் - உருள். பொன் - உருளின் பொற்கட்டு. சேண்டிசை -
சேணிலும் திசையிலும். கீழ்ந்து என்பது கீண்டு என மருவிற்று. மான்
துள்ளப் பொன் தேயத் தேர் நடாத்துவார்கள் என்க. மடங்கல் தேரின்
வினை. கீண்டு என்பது செயவெ னெச்சத்திரிபும் ஆம். (77)

மைந்தர்தந் நெருங்கிற் சிந்து கலவையு மகளிர் கொங்கைச்
சந்தமுங் கூந்தல் சோர்ந்த தாமமுஞ் சிவிறி வீசு
சிந்துரப் பொடியு நாறத் தேனொடு மெழுந்து* செந்தூள்
அந்தர வயிறு தூர்ப்ப வரிபடு நடாத்து வார்கள்.

     (இ - ள்.) மைந்தர் தம் - ஆடவர்களின், நெருக்கில் -
நெருக்கத்தினால், சிந்து கலவையும் - உதிர்ந்த கலவைச் சாந்தும், மகளிர்
கொங்கைச் சாந்தமும் - பெண்களின் கொங்கைகளினின்றும் உதிர்ந்த
சந்தனமும், கூந்தல் சோர்ந்த தாமமும் - (அவர்கள்) கூந்தலினின்றும்
வீழ்ந்த மகரந்தமும், சிவிறி வீசு சிந்துரப் பொடியும் - துருத்தியால் வீசுகின்ற
சிந்துரச் சுண்ணமுமாகிய, செந்தூள் தேனொடும் நாற எழுந்து -
சிவந்த புழுதி தேனொடுங் கமழ மேலெழுந்து, அந்தர வயிறு தூர்ப்ப -
வானத்தின் நடுவிடத்தை மறைக்கும்படி, அடு பரி நடாத்துவார்கள் -வெற்றி
பொருந்திய குதிரைகளைச் செலுத்துவார்கள் (இளைஞர்) எ - று.

     சிந்தாமணியிலே கடை வீதியின் சிறப்புணர்த்து மிடத்து,

"பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி
மாசன மிடம்பெ றாது வண்கடை மலிந்த தன்றே"

எனக் கூறியிருப்பதனோடு 'மைந்தர்தந் நெருங்கிற் சிந்து கலவை' என்பது
ஒப்பு நோக்கற் பாலது. தாமம் - மகரந்தத்துக்கு ஆகுபெயர். சிந்துரப்பொடி
- குங்குமம்; பொற் சுண்ணம் முதலியனவுமாம். பொடியுமாகிய செந்தூள்
நாற எழுந்து தூர்ப்ப நடாத்துவார்கள் என முடிக்க. (78)

தம்முயிர்க் கிரங்கா ராகித் தருக்கொடு மான மீர்ப்பத்
தெம்முனை யெதிர்ந்தா ராற்றுஞ் செருவெனக் குருதிச் செங்கேழ்க்
கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி
வெம்முனை நோக்கி நிற்பார் வேறவற் றூறு நோக்கார்.

     (இ - ள்.) தம் உயிர்க்கு இரங்கார் ஆகி - தமது உயிருக்கு
இரங்காத வர்களாய், தருக்கொடு மானம் ஈர்ப்ப - செருக்கொடு மானமும்
இழுக்க, தெவ் முனை - பகைவரின் போர் முனையில், எதிர்ந்தார் ஆற்றும்
செரு என - எதிர்த்த வீரர்கள் செய்யும் போரைப்பேல (செய்யும்படி),
குருதிச் செம் கேழ் - உதிரம் போலும் செந்நிறத்தையுடைய, கொய் மலர் -
கொய்த மலர் போன்ற, குடுமிச் சேவல் - கொண்டையை யுடைய
சேவல்களையும், கோழ்


     (பா - ம்.) * எழுந்த.