கொடிமுகி றுழாவு மிஞ்சிக் கோநகர் வடகீழ் ஞாங்கர்
முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும்
அடிமிசை நாறத் தென்னர் வழிவழி யரசு செய்யும்
இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாடக் கோயில். |
(இ
- ள்.) முகில் துழாவும் கொடி - மேகத்தைத் தடவுகின்ற
கொடிகளையுடைய, இஞ்சிக் கோ நகர் - மதிலாற் சூழப்பட்ட அத்தலை
நகரின், வடகீழ் ஞாங்கர் - வடகிழக்குப் பக்கத்தில், முடிமிசை வேம்பு நாற
- முடியின்கண் வேப்பம்பூமாலை கமழவும், அடிமிசை - அடிகளின் மேல்,
முருகு அவிழ் - மணம் விரிந்த, ஆரும் போந்தும் நாற - ஆத்தி மாலையும்
பனைமாலையும் கமழவும், தென்னர் வழி வழி அரசு செய்யும் - பாண்டி
மன்னர்கள் வழிவழியாகச் செங்கோலோச்சி வருகின்ற, இடி முரசு உறங்கா
- இடிபோலும் முரசொலி நீங்காத, வாயியல் - வாயிலையும், எழுநிலை
மாடக் கோயில் - எழுநிலை மாடங்களையுமுடைய கோயில் (உள்ளது)
எ - று.
கோ
- தலைமை; அரசுமாம். வேப்பம்பூ மாலை பாண்டியர் முடியீற்
சூடுங்கண்ணியாகலின் 'முடிமிசை வேம்பு நாற' என்றும், சோழரும் சேரரும்
வணங்குங்கால் முறையே அவர்கள் முடியிற் சூடிய கண்ணியாகிய
ஆத்திமாலையும் பனைமாலையும் அடியிற்படுமென்று 'ஆரும்போந் தும்
அடிமிசை நாற' என்றும் கூறினார். சேர பாண்டிய சோழர்க்கு முறையே
உரிய அடையாளப் பூ மாலை இவை யென்பது,
"போந்தை வெம்பே யாரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்" |
எனத் தொல்காப்பியியத்தும்
கூறப் பெற்றுளது. வேம்பு முதலியன ஆகு
பெயர். வழிவழி - தலைமுறையாக. முரசு : வீரம் நியாயம் தியாகம்
என்பவற்றை யுணர்த்தும் மும்முரசுகள். இடையறா தொலிக்கு மென்பார்
'உறங்கா' என்றார். கோயில் - அரசமனை; அரமனை. உள்ளது என ஒரு
சொல் வருவித்து முடிக்கப்பட்டது. ஞாங்கர் உள்ள தென்க. (81)
மறையவர் வீதி
|
ஆத்திக
ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும் நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி
கருவி யாக ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய் முத்தீ
வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம். |
(இ
- ள்.) ஆத்திகர் உண்டு என்று ஓதும் - ஆத்திகர்கள் உண்டு
என்று சொல்லுகின்ற, அறம் முதல் பொருள்கள் நான்கும் - அற முதலிய
நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர் - இல்லையென்று
கூறுகின்ற வஞ்சகரின், நா அரி கருவி ஆக - நாவினை அறுக்கின்ற
வாளாக, ஆத்தனால் உரைத்த - இறைவனால் அருளிச் செய்யப்பட்ட,
வேத அளவு கண்டு - மறையீன் முடிவை உணர்ந்து, உள்ளம் தேறி -
மனந் தெளிந்து, தீர்த்தராய் - தூய்மையுடையராய், முத்தீ வேட்கும் -
மூன்று தீயினை ஓமபுதலாகிய வேள்வியை முடிக்கும், செல்வர் தம்
இருக்கை
|