I


திருநகரச் சிறப்பு121



பாடங்கட்கு முறையே பஞ்சு, ஏக்கற்று நின்று என்பன பொருள்களாம். (83)

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத
நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.

     (இ - ள்.) தீவினை அந்தணாளர் சிறார் - அங்கி காரியத்தையுடைய
பார்ப்பனரின் சிறுவர்கள், பயில் தெய்வ வேதம் - பயிலுதற்குரிய திப்பிய
மறைகளை, நா உரு ஏற்றக் கேட்டு - (தமது) நாவினால் உருப்போடுதலைக்
கேட்டு, கிளிகளோ நவிலும் - (அவ்வில்லங்களிலுள்ள) கிளிகள்
மட்டுமாகூறாநிற்கும் (அன்று); வேற்றுப் பூவையும் பயின்று - அயலிடங்
களிலுள்ள நாகணவாய்ப் புட்களும் கற்று, புத்தேள் உலகு உறை -
தேவருலகத்திற் பொருந்திய, புது மந்தாரக் கா உறை கிளி கட்கு எல்லாம்
- புதிய மலர்களையுடைய கற்பகச் சோலையின்கண் உறையும் கிளிகளுக்
கெல்லாம், கசடு அறப் பயிற்றும் - குற்றம் நீங்கக் கற்பிக்கும் எ-று.

     உருவேற்றல் - பலமுறை கூறிப் பயிலுதல்; இதனை நெட்டுருச்
செய்தல் என்றுங் கூறுவர். மந்தாரம் - கற்பகம் முதலியவற்றுக்கும்
உபலக்கணம். 'என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும், நின்றலர்ந்து
தேன் பிலிற்றும்' என்ப ஆகலின் 'புது மந்தாரம்' என்றார். கிளிகட்
கெல்லாம் - கிளிகளெல்லாவற்றுக்கும் என உருபு பிரித்துக் கூட்டுக. கசடு
- சுரவழு முதலிய குற்றம். உயர்வு நவிற்சி. மன், ஓ : அசை. (84)

வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின்
பேதமுந் தெரிந்தோ ராலும் பிறர்மதங் களைய வல்ல
வாதமு மதமேற் கொண்டு மறுத்தலு நிறுத்த வல்ல
போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம்.

     (இ - ள்.) வேதமும் - நான்கு மறைகளும், அங்கம் ஆறும் - ஆறு
அங்கங்களும், மிருதியும் - பதினெண் மிருதிகளும், புராண நூலின் பேதமும்
- பேதமுள்ள பதினெண் புராண நூல்களும் ஆகிய இவைகளை,
தெரிந்தோராலும் - அறிந்தோர்களாலும், பிறர் மதம் களையவல்ல வாதமும்
- பிறர் கொள்கையை அழிக்கவல்ல வாதத்தினையும், மதம் மேற்கொண்டு
மறுத்தலும் - அவர் கொள்கையை ஒருவாற்றான் மேற் கொண்டு மற்றொரு
வாற்றால் மறுத்தலையும், நிறுத்த வல்ல போதமும் - தமது கொள்கையை
நிறுத்திச்சாதிக்கவல்ல உணர்ச்சியுயையும், உடை யோராலும் -
உடையவர்களாலும், கழகம் எல்லாம் பொலிந்தன - கழகங்கள் அனைத்தும்
விளங்கின எ - று.

     வேதங்களும் அங்கங்களும் இவையென முன் உரைக்கப்பட்டன,
மிருதி பதினெட்டனையும்,

"மனுவே அத்திரி ஒளரிதம் விண்டு
யாஞ்ஞ வற்கியம் உசனம் ஆங்கிரசம்