இயமம் ஆபத் தம்பம் சம்வர்த்தம்
காத்தி யாயனம் பிரகற்பதி பராசரம்
வியாசம் சங்கலிதம் தக்கம் கௌதமம்
சாதன்ம மோடு வசிட்டம் இவையே
தருமநூல் பதினெட் டாகு மென்ப" |
என்னும் திவாகரச்
சூத்திரத்தானறிக. இவை இருடிகளால் வேதங்களின்
அருத்தங்களை நினைந்து செய்யப்பட்டனவாம். புராணங்களின்
பேதங்களைபு புராண வரலாற்றுட் கூறுதும்; ஆண்டுக் கண்டு கொள்க.
மதம் - கொள்கை; நன்னூலார் கூறிய எழுவகை மதங்களுள் மறுத்தல்,
பிறர் மதம் மேற்கொண்டு களைதல், தான் நாட்டித் தனாது நிறுத்தல்
என்னும் மூன்றும் இங்கே குறிக்கப்பட்டன. கழகம் - ஓதுஞ் சாலை. (85)
உறிபொதி கரகக் கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த
அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள
எறிசுடர் மழுவா ளென்னக் கோவணம் யாத்த* கோலா
மறைமுடி வன்றித் தேறா மாதவர் மடங்க ளெங்கும். |
(இ
- ள்.) உறிபொதி கரகக் கையர் - உறியாற் பொதியப்பட்ட
கமண்டலத்தைக் கையிலுடையவரும், ஒளிவிடு செம் கல் தோய்த்த
அறுவையர் - ஒளிவீசும் சிவந்த காவிக் கற்குழம்பில் தோய்த்த ஆடையையுடையவரும், உயிர்க்கு
ஊறு அஞ்சும் நடையினர் - எறும்பு
முதலிய சிற்றுயிர்களுக்கு நேரும் துன்பத்தை யஞ்சி மெல்லென ஒதுங்கும்
நடையையுடையவரும், அவிச்சை மாள - அஞ்ஞானமரம் கெட, எறி சுடர்
மழுவாள் என்ன - வீசுகின்ற ஒளியையுடைய மழுப்படையைப் போல,
கோவணம் யாத்த கோலர் - கோவணங் கட்டிய தண்டத்தை
யுடையவருமாகிய, மறைமுடிவு அன்றித் தேறா மாதவர் - உபநிடதங்
களையன்றி வேறு நூல்களைச் சிந்தியாத முனிவர்களின், மடங்கள் எங்கும்
- மடங்கள் (அவ்வீதிகளில்) எவ்விடத்தும் (உள்ளன) எ - று.
துறவிகள்
காவியுடை யுடுப்பர்; இதனை, 'கற்றோய்த் துடுத்த' என்றார்
முல்லைப்பாட்டிலும். அவிச்சை - அஞ்ஞானம்.
எறிதல் - துணித்தல்.
எறிசுடர் மழுவாள் என்றமையால் அவிச்சையாகிய மரமென்க. கோவணம்
தலைப்பில் யாத்த கோல், வடிவால் மழுவினைப்போலும். அவர்
அவிச்சையின் வலியைக் கெடுத்தலின் அதனைக் கோலின்மே லேற்றிக்
கூறினார். மறைமுடிவு - வேத அந்தம்; அதனை இடையறாது சிந்தித்துத்
தெளிவரென்க. மாதவர் - சந்நியாசிகள். (86)
அட்டில்வாய்ப் புகையு மாடத் தகில்படு புகையும் வேள்வி
விட்டெழு புகையு மொன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல்
பட்டது பலருந் தத்தம் பயில்வினை யிழக்க நங்கை
மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாள் மானு மன்னோ. |
(இ
- ள்.) அட்டில்வாய்ப் புகையும் - அடுக்களையினின்று எழுந்த
புகையும், மாடத்து அகில்படு புகையும் - மேன்மாடத்தினின்றும் அகிற்
(பா
- ம்.) * ஆர்த்த.
|