கட்டையா லுண்டாகி
எழுந்த புகையும், வேள்விவிட்டு எழு புகையும் -
வேள்விக் குண்டத்தினின்றும் விடப்பட்டு மேலெழுந்த புகையும், ஒன்றி -
ஒன்றுபட்டு, விரிசுடர் விழுங்க - ஒளிவிரிந்த சூரியனை மறைக்க, கங்குல்
பட்டது - இருள் நிறைந்ததாகிய அந்த நாள், பலரும் தம் தம் பயில்வினை
இழக்க - அனைவரும் தத்தமக்குரிய செய்யுந் தொழில்களை இழக்கும்படி,
நங்கை - உமையம்மை, மட்டு அவிழ் கடுக்கையான் - மணம்விரிந்த
கொன்றை மாலையையுடைய இறைவனுடைய, கண் புதைத்த நாள் மானும்
- திருக்கண்களைத் (தமது கரத்தால்) மூடிய நாளை ஒக்கும் எ - று.
அகிற்புகை
மகளிர் கூந்தலில் ஈரம் புலர்த்துதற்கு இடப்பட்டது.
விட்டு - விடப்பட்டு; நீங்கி யெனினுமாம். கங்குல் பட்டது :
வினையாலணையும் பெயர். பயிறல் - செய்தல். மன், ஓ : அசை.
கண்புதைத்த
வரலாறு : - ஒருகாலத்தில் திருக்கையிலுள்ள
இளமரக்காவில் சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளி யிருக்கும்
பொழுது இறைவி ஒரு திருவிளையாடலைக் கருதிப் பின்னே வந்து
இறைவனுடைய திருக்கண்களைப் பொத்த, அக்கக்ள் பரிதியும் மதியு
மாதலால் உலகெங்கும் இருள்மூடிற்று; எல்லாவுயிர்களும் தத்தம்
தொழில்களைக் கைவிட்டு வந்தன; அப்பொழுது பெருமான் நுதற்கண்ணைத்
தோற்றுவித் தருளினர் என்பது. இதனைக் கந்தபுராணம்,
ததீசியுத்தரப்
படலத்திலுள்ள,
"ஈசனை யொருஞான் றம்மை யெழில்பெறு
கயிலைக் காவிற்
பேசல ளாட லுன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
மாசிருள் பரந்த தெல்லா வுயிர்களும் வருத்தங் கொள்ள" |
"ஓங்குதன் னுதலி னாப்ப ணொருதனி
நாட்ட நல்கி
ஆங்கது கொண்டு நாத னருள்கொடு நோக்கி யாண்டு
நீங்கரு நிலைமைத் தாகி நின்றபே ரிருளை மாற்றித்
தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை யீந்தான்" |
என்னுஞ் செய்யுட்களா லுணர்க. இவ் வரலாற்றினை,
"நாயகன் கண்ண யப்பா னாயகி புதைப்ப
வெங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்" |
எனச் சிவஞானசித்தியார் கிளந்தெடுத் துரைத்தலுங்
காண்க. (87)
சைவர் வீதி
[கலிநிலைத்துறை]
|
தெய்வ நீறுமைந்
தெழுத்துமே சிதைக்கல னாக
எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவிப்
பௌவ மேழையுங் கடந்தரன் பதமலர்க் கரைசேர்
சைவ மாதவ ருறைமடத் தனிமறு குரைப்பாம். |
|