"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்" |
என்னும்
தமிழ்மறையுங் காண்க. இருள்மலம் - ஆணவம்; அறியாமை,
இது, புறவிருளானது கண்ணை மறைப்பதுபோன்று உயிரின் அறிவை
மறைத்தலின் இருளெனவும்படும். உளர் என ஒருசொல் வருவித்து
எங்குமுளர் எனமுடிக்க. (89)
அழிவி லானுரை யாகம மிலக்கமாய்ந் தவற்றுள்
விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத்*
தழுவு தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் பாசங்
கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால். |
(இ
- ள்.) அழிவு இலான் உரை - நித்தனாகிய சிவபிரான் அருளிப்
பாடாகிய, ஆகமம் - ஆகமங்களின், இலக்கம் ஆய்ந்து - நூறாயிரங்
கிரந்தங்களை ஆராய்ந்து, அவற்றுள் விழுமிதாகிய விதியினும் விலக்கினும்
- அவற்றுள்ளே உயர்ந்த விதியானும் விலக்கானும், அடியைத் தழுவு -
(தமது) திருவடிகளை இறுகப்பற்றிய, தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் -
தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் ஆகி யஇவர்களின், பாசம் கழுவி -
பாசத்தைப் போக்கி, வீடு அருள் - வீட்டுலகை அருளுகின்ற, போதகக
்காட்சியர்பலர் - மெய்யுணர்வினை யுடையஞானாசிரியர் பலர் (அவ்வீதியில்
உள்ளார்) எ - று.
உரை
ஆகமம் - உரைத்த ஆகமம் என வினைத்தொகையுமாம்.
ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவையென்பது, 'மன்னு மாமலை
மகேந்திர மதனிற், சொன்னவாகமந்தோற்றுவித் தருளியும்' என்பது முதலிய
திருவாசகப் பகுதிகளிலும் குறிக்கப்பெற்றுளது.
ஆகமத்துள் இலக்கங்
கிரந்தம் ஆராய்ந்துணர்ந்தவர் உத்தமரென்ப. தொண்டர் - சரியை
நெறிநிற்போர். மைந்தர் - கிரியைநெறி நிற்போர். சாதகர் - யோகநெறி
நிற்போர். போதகக்காட்சியர் - ஞானிகள்; காட்சி - உணர்வு. இந்நான்கு
நெறியும் முறையெ தாசமார்க்கம், புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் எனவுங் கூறப்படும். இவர் சமயம், விசேடம், நிருவாணம்,
ஆசாரியாபிடேகம் என்னும் தீக்கைகளை முறையே பெற்றவராவரென்றும்
கூறுவர். தொண்டர்கள் முதலிய மூவரும் அடியைத் தழுவி நிற்கும்
மாணாக்கரெனவும், போதகக்காட்சியர் அவர்கள் பாசத்தைப்போக்கி
வீடருளும் ஆசாரியரெனவும் உணர்க. விதியினும் விலக்கினும் தழவிய
என்க; விதியினும் விலக்கினும் பாசங் கழுவி என இயைப்பாருமுளர்.
தொண்டர் மைந்தர் சாதகர் என்போரும், காட்சியரும் பலர் என
உரைத்தலுமாம். ஆல் : அசை. (90)
மறைக ளாகமம்
பொதுச்சிறப் பெனச்சிவன் வகுத்த
முறையி+னோதிய விதி+விலக் குரைகளு முடிவில்
அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைந்த
குறைவி லாச்சிய யோகியர் குழாங்களும் பலவால். |
(பா
- ம்.) * அடியில். +வகுத்துமுறையின், வகுத்தமுறையம்
+ஓதியவ்விதி.
|