I


126திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) மறைகள் ஆகமம் - வேதங்களையும் ஆகமங்களையும்,
பொது சிறப்பு என - (முறையே) பொதுவாகவும் சிறப்பாகவும், சிவன்
வகுத்த முறையின் - சிவபிரான் ஒருவனே அருளிச்செய்த முறைமையினால்,
ஓதிய விதிவிலக்கு உரைகளும் - அவற்றுள் கூறப்பட்ட விதிவிலக்கு
மொழிகளும், முடிவில் அறையும் வீடும் - அவற்றின் இறுதியிற் கூறுகின்ற
வீடும், ஒன்று இரண்டு எனும் பிணக்கு அற - ஒன்று என்றும் இரண்டு
என்றும் கூறுகின்ற மாறுபாடு இல்லை யாகக்கொண்டு, அமைந்த -
தெளிந்திருந்த, குறைவு இலா - குறைவில்லாத, சிவயோகியர் குழாங்களும்
பல - சிவயோகியர் கூட்டங்களும் பல (அவ்வீதியில் உள்ளன) எ - று.

     வேதம் பல்வேறு நிலையினர்க்கும் அவரவர் பக்குவத்திற் கேற்பப்
பொருளுணர்த்தி நிற்றலின் பொதுவென்றும், ஆகமம் சத்திநிபாத
முடையார்க்கு வேதத்தின் உண்மைப் பொருளுணர்த்தலின் சிறப்பென்றுங்
கூறப்படுமென்ப. இங்ஙனம் சிவபெருமான் ஒருவராலேயே இவை பொதுவும்
சிறப்புமாக அருளிச் செய்யப்பட்டமையால் இவை கூறும் பொருளனைத்தும்
அபேதமுமல்ல, பேதமுமல்லவென்பார் 'ஒன்றிரண்டெனும் பிணக்கற'
என்றார். இப்புராணத்துள்ளே பின் 'வேதவாகமச் சென்னியில்
விளைபொருளபேதம், பேதமாகிய பிணக்கறுத்து' என வருவதும்
இக்கருத்தினதே. 'விதிவிலக்குரைகளும் வீடும் ஒன்றே : அங்ஙனமாகவும்
இரண்டென்று பிணங்குவார் பிணக்கற அமைந்த' எனப்
பொருளுரைப்பாருமுளர்,

"வேதமொ டாகம மெய்யா மிறைவனூல்
ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக
நாத னுரையவை நாடிலி ரண்டந்தம்
பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே"

என்னும், திருமந்திரமும்,

"வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள்
     வேறுரைக்கு நூலியவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டும்
     ஆரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம்
நீதியினா லுலகர்க்குஞ் சத்திநிபா தர்க்கும்
     நிகழ்த்தியவை நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத்
தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல்

     திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்" என்னுஞ்
சிபஞானசித்தித
திருவிருத்தமும் இச்செய்யுளின் பொருளைத்
தெளிவுபடுத்துவனவாம். வேதாகமத்துணி பிரண்டில்லை யொன்றென்னவே'
மூலன் மரபில்வரு மௌனகுரு தமக்குணர்த்தியதாகத் தாயுமானவடிகள்
கூறுவர். இச்செய்யுட்குப் பிறர் பிறவா றுரைக்கும் பொருள்கள் பொருந்து
மேற் கொள்க. (91) திருக்கோயில் முதலியன

குழலுந் தும்புரு நாரதர் பாடலுங் குனித்துச்
சுழலுங் கொம்பனா ராடலு மூவர்வாய்த் துதியும்