I


128திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     விடங்கம் - உளியாற் செய்யப்படாதது என்னும் பொருளது;
சுயம்புலிங்கம் என்பர்; இஃது அழகென்னும் பொருளிலேயே பயின்று
வருதலின் விடங்கர் என்பதற்கு அழகர் என்பதே சிறந்த பொருளாம்.
மன்றினின்றும் வளர்ந்து எழுகின்ற எனக் கூட்டுக. கண்ணி - தலையிற்
சூடுமாலை; இது கண்ணி போறலின் கண்ணியெனப் படும். உலகம்
அழிவதாவது மாயை யென்னுங் காரணத்துளொடுங் குவதாகலின்
'ஒடுங்குகின்ற' என்றார். நீட்டம், ஓக்கம் என்பன பண்புப் பெயர்கள். நீள்,
ஓங்கு என்பன முறையே பகுதிகள்; அம் : விகுதி. கைலைமலையானது
உலகங்களெல்லாம் ஒடுங்கும் ஊழிக் காலந்தோறும் ஓங்கு மென்பது.

"ஊழிதோ றூழிமுற்றும் உயர்பொன் னொடித்தான் மலையே"

என்று தம்பிரான்றோழர் அருளிச் செய்திருப்பதனாலும் அறியப்படும். (93)

சுரந்து தேன்றுளித் தலர்களுஞ் சொரிந்துவண் டரற்ற
நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு*
பரந்து கட்புன லுகப்பல மலர்கடூப் பழிச்சி
இரந்து நின்றருச் சனைசெயு மிந்திர னிகரும்.

     (இ - ள்.) தேன் சுரந்து துளித்து - தேன் ஊற்றெடுத்துத் துளித்து,
அலர்களும் சொரிந்து - மலர்களையும் சொரிந்து, வண்டு அரற்ற -
வண்டுகள் ஒலிக்க; நிரந்து - தழைத்து, சுந்தரற்கு ஒருசிறை - சோமசுந்தரக்
கடவுளுக்கு ஒரு பக்கத்தின், நின்ற பூங்கடம்பு - நிற்கின்ற பூக்களையுடைய
கடம்பமரமானது, கண் புனல் பரந்து உக - கண்களின்ன்று அருவியானது
பெருகிப் பொழிய, பலமலர்கள் தூய் - பல மலர்களைத் தூவி, பழிச்சி -
துதித்து, இரந்து நின்று - குறையிரந்து நின்று, அருச்சனை செயும் -
அருச்சிக்கின்ற, இந்திரன் நிகரும் - இந்திரனை ஒக்கும் எ - று.

     தேன்றுளித்தலுக்குக் கட்புனல் சொரிதலும். அலர் சொரிதலுக்கு மலர்
தூவுதலும், வண்டு அரற்றலுக்குப் பழிச்சுதலும், பூங் கடம்பிற்கு இந்திரனும்
உவமைகளாம். நின்ற - நிற்கின்ற. தூவியென்பது தூய் என விகாரப்பட்டது.
(94)

உழல்செய் தீவினை யுருப்பற வுயிர்க்கெலா மடியின்
நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின்
குழல்செய் வண்டுகற் பகமதுக் கொண்ர்ந்துவந் தூட்டித்
தழல்செய் காமமென் பேடையி னூடனோய் தணிக்கும்.

     (இ - ள்.) உழல் செய் - வருந்துதலைச் செய்கின்ற, தீவினை உருப்பு
அற - தீவினையாகிய வெப்பம் நீங்க, உயிர்க்கு எலாம் - உயிர்
அனைத்திற்கும், அடியின் நிழல் செய்வார்க்கு - (தமது) திருவடியின் நீழலை
அருளுகின்ற சோம சுந்தரக்கடவுளுக்கு, நீள் நிழல் செயா நின்ற பூங்
கடம்பின் - மிகுந்த நிழலைச் செய்து (ஒருசிறை) நிற்கின்ற பூக்கள் நிறைந்த
கடப்ப மரத்தினுள்ள, குழல் செய் வண்டு - வேய்ங்குழலின் இசைபோலும்


     (பா - ம்.) * நின்றலர் கடம்பு.