I


130திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கேதுவாகிய, நாத அந்தமும் - நாத முடிவையும், கடந்தது - கடந்ததாகிய,
ஓர் - ஒப்பற்ற, நடுநிலைப் பொருளின் - நடுநிலைப் பொருளாகிய
இறைவனுடைய, பாதம் - திருவடிகளை, வந்தனை - வணங்குதலையுடைய,
பத்தியின் பாலராய்ப் பயில்வோர் - அன்பின் பகுதியை யுடையவராய்
ஒழுகுவார்க்கு, மாதவம் தருபயன் என - அச்சிவ புண்ணியந் தருகின்ற
பயன் தழைப்பதுபோல், பல் வளனும் தழைத்த - பல வளங்களும் (அங்கு)
தழைத்தன எ - று.

     வேத அந்தம் - உப நிடதம். நாத அந்தம் - நாத தத்துவத்தின்
முடிபு. நாதம் - தத்துவங்க ளெல்லாவற்றினும் தலையாயது; நாத
தத்துவத்தைத் தரிசித்தவர்க்கு மெய்ப்பொருள் விளங்கு மென்பார் 'மெய்ப்
பொருள் விளங்கு நாதவந்தம்' என்றார்; விளங்கு மென்பதனை இடைநிலை
விளக்காகக் கொண்டு வேத வந்தமும் என்பதனோடும்
இயைத்துரைத்தலுமாம். இறைவன் பாச ஞானம் பசு ஞானங்களைக் கடந்தவ
னென்பார் வேத வந்தமும் நாத வந்தமும் கடந்த என்றார். நடுநிலைப்
பொருள் - எள்ளினுள் எண்ணெய்போல எங்கும்கலந்துள்ள பொருள்.
தழைத்த : அன்பெறாத பலவின்பால் முற்று. (97)

பொறிக ளைந்தினுக் கூட்டுபல் போகமு மிதப்பச்
செறிகொ ணீரவா லுவப்பத்* திருநகர் மாக்கள்
நெறிகொள் செஞ்சடைப் பிறைமுடி நிருமலக் கொழுந்தின்
வெறிகொ ணாண்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல்.

     (இ - ள்.) நெறிகொள் செஞ்சடை - நெறித்தலைக் கொண்டசிவந்த
சடையின்கண், பிறைமுடி - சந்திரனை அணிந்த, நிருமலக் கொழுந்தின் -
இயல்பாகவே பாசங்களி னீங்கிய இறைவனுடைய, வெறிகொள் - மிகுந்த
மணத்தைக் கொண்ட, நாள் மலர் அடிதழீஇ - அன்றலர்ந்த மலர்போலுந்
திருவடிகளைப்பற்றி, வீடுபெற்றார் போல் - வீட்டுலகை யடைந்தவ ரடையும்
இன்பம்போல், அத்திருநகர் மாக்கள் உவப்ப - அம் மதுரை மாநகரிலுள்ள
மக்கள் இன்பம் பெற, பொறிகள் ஐந்தினுக்கு ஊட்டு - ஐம்பொறிகளுக்கும்
உண்பிக்கின்ற, பல்போகமும் - பல போகப் பொருள்களும், மிதப்பச்
செறிகொள் நீர - மிக நிறைந்த தன்மையுடையன எ - று.

     ஐந்தினுக்கு - இனைத்தென அறிபொருளில் வரும் முற்றும்மை
தொக்கது; இன் : சாரியை. மிதப்ப - மிக. செறி, நெறி ன்பன முதனிலைத்
தொழிற் பெயர். நீரவால் என்பதில் ஆல் அசை. நீர்மையை
உடையவாதலால் மாக்கள் உவப்ப என முடித்தலுமாம்; இதற்கு உவப்ப
என்பது பலர்பால் முற்று. (98)

முன்ன வன்னர சிருக்கையா லந்நகர் முளரிப்
பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வந்
தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும்
மின்னை யீன்றதஃ தீன்றதால் விழுத்தகு புகழே.

     (இ - ள்.) முன்னவன் அரசு இருக்கையால் - யாவர்க்கும்
முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுள் அரசு புரிந்தமையினால், அந்நகர்
முளரிப்


     (பா - ம்.) * உவர்ப்பத்.