I


திருநகரச் சிறப்பு131



பொன்னை ஈன்றது. அம்மதுரையானது தாமரை மலரில் வீற்றிருக்குந்
திருமகளைப் பெற்றது; அது - அத்தெய்வம், பல பொருள் நிறை செல்வம்
தன்னை ஈன்றது - பல பொருள்களும் நிறைந்த செல்வத்தைப் பெற்றது;
அது - அச்செல்வம், பல தருமம் என்று ஒரைக்கும் மின்னை ஈன்றது - பல
அறங்கள் என்று சொல்லப்படுகின்ற பெண்ணைப் பெற்றது; அஃது - அந்தப்
பெண், விழுத்தகு புகழ் ஈன்றது - சீரிய புகழைப் பெற்றது எ - று.

     னகரம் விரித்தல். ஈன்றதால் மூன்றினும் ஆல் : அசை. பின் பின்னாக
வருவனவற்றிற்கு முன் முன்னாகவுள்ளன காரணமாக விருத்தலின் இது
காரண மாலையணி. (99)

எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்
வழுத்த நின்றவிந் நகர்வயி னும்பரின் மாண்ட
விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத்
தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்.

     (இ - ள்.) எழுக் கடந்த தோள் - தூணை வென்ற தோள்களை
யுடைய, உருத்திரன் உலகமென்று - சிவபிரானுலகமென்று, யாரும் வழுத்த
நின்ற எவரும் பரவுதற்கு அமைந்த, இந்நகர்வயின் - இம் மதுரை
நகரின்கண் உள்ள, உம்பரின் மாண்ட - (தமது) தேவ உலகிலுள்ள
பொருள்களினும் மாட்சிமைப்பட்ட, விழுத்தகும் பல செல்வமும் - சீரிய பல
செல்வங்களையும், பார்த்து வியந்து - கண்டு வியப்படைந்து, உள்ளத்து
அழுக்கு அறாமையால் - மனத்தின்கண் பொறாமை நீங்காமையினால்,
அமரர் இன்னமும் கண் உறங்கார் - தேவர்கள் இன்னமும் கண்டு
யிலாதவரா யள்ளார்கள் எ - று.

     உருத்திர வுலகம் - சிவலோகம்; பெயர்; 'எழுக்கடந்தோள்' என்பது
உருத்திரனுக்கு அடை; உருத்திரனுலகம் எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு;
'குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம்' என்பதுபோலக் கொள்ளலுமாம். அழுக்கு
- பொறாமை. இனி யென்னும் இடைச்சொல் அம்முப்பெற்று இகரங் கெட்டு
இன்னம் என்றாயது. அழுக்காறுடையார் கண்ணுறங்கார் என்றார். அமரர்க்கு
இயல்பாய கண்ணுறக்க மின்மையைப் பொறாமையால் வந்ததெனக் கவி
தன்கருத்தை யேற்றிக் கூறுதலின் இது தற்குறிப்பேற்றவணி. (100)

விரைய விழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்துத்
திரையை வென்றது முடிதகர்த் திந்திரன் செருக்குக்
கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக
வரையை வென்றது மிந்நகா வலியினா லன்றோ.

     (இ - ள்.) விரை அவிழ்ந்த தார் மீனவர் - மணம் விரிந்த மாலையை
யணிந்த மீனக் கொடியை யுடைய பாண்டி மன்னர், வாகை வேல் விடுத்து
- வெற்றி மாலையைச் சூடிய வேற்படையை ஏவி, திரையை வென்றதும் -
கடலைச் சுவறச் செய்து வெற்றி பெற்றதும், இந்திரன் முடி தகர்த்து -
இந்திரனுடைய முடியைப் பொடியாககி, செருக்குக் கரைய வென்றதும் -
(அவன்) செருக்கு அழியும்படி செய்து வெற்றி பெற்றதும், கார் தளை
இட்டதும் - முகிலை விலங்கு பூட்டிச் சிறையிலிட்டதும், கனக வரையை