I


திருநகரச் சிறப்பு135



     (இ - ள்.) கற்பவை கற்றும் - கற்கத் தகுவனவாய மெய்ந்நூல்களைக்
கற்றும், கேட்டும் - (அந்நூற் பொருளைப் பெரியார்வாய்க்) கேட்டும்,
கேட்டவை - (அங்ஙனங்) கேட்டவைகள், கருத்துள் ஊற - கருத்தில்
பதியும்படி, சொல்பொருள்நினைந்தும் - சொல்லையும் பொருளையும்
பலகாற் சிந்தித்தும், கேட்போர்க்கு உணர்த்தி - கேட்பவருக்கு அறிவித்து,
உள் துளக்கம் தீர்த்தும் - (அவர்கள்) உள்ளத்திலுள்ள ஐயத்திரிபாகிய
கலங்களைப் போக்கியும், எல் பகல் இரவு நீங்கு இடத்து - ஒளி
பொருந்திய பகலும் இரவும் அற்ற விடத்தில், மெய் அறிவு ஆனந்த அற்புத
வெள்ளத்து - சச்சிதானந்த சொரூபமாகிய அற்புத வெள்ளத்தின்கண்,
ஆழாது ஆழ்ந்தும் - படியாமற் படிந்தும், நாள் கழிப்பர் சில்லோர் -
நாளைப் போக்குவர் சிலர் (அப்பதியில்) எ - று.

     கற்பவை - கற்கத் தகுவனவாகிய ஞான நூல்கள். நினைதல் -
சிந்தித்தல். கேட்போர்க்குணர்த்தியென்றது கேட்பித்து என்றவாறு.
இவற்றுடன் கற்பித்தலையுங் கூட்டி ஞான பூசை யென்பார்; 'ஞானநூல்
தனையோத லோது வித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல்
நன்றா, ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்தும் இறைவனடியடை
விக்கு மெழின்ஞான பூசை' என்பது சிவஞானசித்தி. எல் - ஒளி. இரவு
பகல் என மாற்றிக் கொள்க. இரவு பகலற்ற விடமாவது கேவல
சகலங்களின் நீங்கிய சுத்தாவத்தையில் நிற்கும் அருளா தார நிலை; 'இரவு
பகலில்லா வின்ப வெளியூடே, விரவி விரவிநின் றுந்தீபற, விரைய
விரையநின் றுந்தீபற' என மெய்ந்நூல் கூறுதலுங் காண்க. மெய் -
அழிவில்லது; சத்து. ஆழாது ஆழ்தல் - அதுவாதலும் வேறாதலுமின்றிப்
பேரின்ப நிட்டை கூடியிருத்தல். (107)

தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவ னாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முக னன்றோ
அன்னது தனதே யாகு மண்ணலே பாண்டி வேந்தாய்
இந்நகர்க் கரச னாவா னக்கவிக் கிறைவ னாவான்.

     (இ - ள்.) தன் நிகர் உயர்ச்சி இல்லான் - தனக்கு ஒப்பும் உயர்வு
மில்லாதவனே, காப்பியத் தலைவன் ஆக - காப்பியத் தலைவனென்று,
முன்னவர் மொழிந்தது - முன்னுள்ளவர்கள் கூறியது, ஏனோர் தமக்கு
எலாம் முகமன் அன்றோ - மற்றையோர்க்கெல்லாம் உபசாரமல்லவா,
அன்னது தனதே ஆகும் அண்ணலே - அவ்வுயர் வொப்பில்லாத
தன்மையைத் தனக்கே உரிமையாகக் கொண்டிருக்கும் இறைவனே, பாண்டி
வேந்தாய் - பாண்டி மன்னனாய், இந்நகர்க்கு அரசன் ஆவான் - இம்மதுரை
நகருக்கு அரசனாவானும், இக்கவிக்கு இறைவன் ஆவான் -
இக்காப்பியத்திற்குத் தலைவனாவானும் ஆகும் எ - று.

     காப்பியம் - கவியால் இயற்றப்படுவது; கவி - புலவன்; காப்பியம்
என்பது தமிழில் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும். காப்பியத் தலைவன்
ஒப்புயர் வில்லானாதல் வேண்டுமென்பதை,

"பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாகி முன்வர வியன்று