(இ - ள்) பொரும் ஆறில் - போர்த்துறையில்,
கிளர் - விளங்கா
நின்ற, தடம் தோள் - பெரிய தோள்களையுடைய, ஒரு மாறன் - ஒரு
பாண்டியன், மனம் கிடந்த - மனத்தின்கண் தங்கிய, புழுக்கம் மாற -
துன்பம் நீங்கவும், வரும் ஆறில் - பெருகிவரும் ஆற்றுநீர்போல், கண்
அருவி - கண்களினின்றும் ஒழுகும் நீரருவி, மாறாது - நீங்கப்பெறாது,
களிப்பு அடைய - (அம்மன்னன்) மகிழச்சியடையவும், பவக்கடல் வீழ்ந்து -
பிறவிக் கடலுள் வீழ்ந்து, உருமாறி - நால்வகைக்கதியினும் மாறி மாறி,
ஊசலென - (மேலும் கீழும் போவதும் வருவதுமாகிய) ஊசல் போல,
மண்ணும் விண்ணும் தடுமாறி - மண்ணுலகத்தும் விண்ணுலகத்தும் வருவதும்
போவதுமாகி, உழலும் மாக்கள் - வருந்துகின்ற மக்கள், கருமாறி -
கருவிற்சென்றடைதலினின்றும் நீங்கி, கதி அடைய - வீடுபெறவும், கால்மாறி
நடித்தவரை - கால் மாறி யாடிய வெள்ளியம்பல வாணரை, கருத்துள்
வைப்பாம் - மனத்துள் வைத்து வணங்குவாம் எ - று.
வெட்சி,
வஞ்சி முதலிய புறத்திணைகளும், அவற்றின் பகுதியாய
துறைகளும் பொருமாறு எனப்பட்டன; விற்போர், வாட்போர், மற்போர்
முதலிய போர் விகற்பங்கள் எனினும் பொருந்தும். மாறன் - இராசசேகர
பாண்டியன்; இம்மன்னன் பரதநூற்றுறை பயின்று அதனாற் கால் தளர்ந்து
வருந்தி, எம் பெருமானுக்கும் இங்ஙனம் திருவடி வருந்துமே என நினைந்து
உளம்புழுங்கி வேண்டிக் கொள்ள, அவன் மகிழும்படி இறைவன் ஊன்றிய
திருவடியை மேலெடுத்தாடி யருளினன்; இதன் விரிவைக் கான்மாறியாடின
படலத்திற் கண்டு கொள்க. பொருமாற்றில், வருமாற்றின் எனற் பாலன
விகாரப்பட்டன, ஊசலென மனந்தடுமாறி எனினும் ஆம்; உறுகயி றூசல்
போல வொன்றுவிட் டொன்று பற்றி, மறுகயி றூசல் போல வந்துவந் துலவு
நெஞ்சம் என்னும் திருநேரிசையும் காண்க.
(12)
தட்சிணாமூர்த்தி
|
கல்லாலின்
புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற்
கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய்
மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி
யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
னினைந்துபவத்
தொடக்கை வெல்வாம். |
(இ
- ள்.) கல் ஆலின் புடை அமர்ந்து - கல்லால மரத்தின் கீழ்
இருந்து, நான்மறை ஆறு அங்கம் முதல் - நான்குமறை ஆறு அங்க
முதலானவற்றை, கற்ற - கற்றுணர்ந்த, கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் -
கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்கட்கும்,
வாக்கு இறந்த பூரணமாய் - வாக்கியலைக் கடந்த நிறைவாயும், மறகை்கு
அப்பாலாய் - வேதங்கட்கு அப்பாற்பட்ட தாயும், எல்லாமாய் -
எல்லாமாயும், அல்லதுமாய் - (அவற்றுள் ஒன்றும்) அல்லதுமாயும்,
இருந்ததனை -
|