அந்தமண்டபத்திலேறி,
சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம்
முதலிய தவங்களை முடித்து, ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத
சந்திர சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத்
தியானித்துத் துதித்து எ - று. சந்தியிற் செய்யப்படுவதனைச்
சந்தி
யென்றார், தவம் - செய்கடன். ஈறிலானென்க. குளகம் (5)
சம்பு பத்தன்
சதானந்த னுத்தமன்
அம்பு யத்த னனைய மகோதரன்
உம்ப ரஞ்சிய வுக்கிய வீரியன்
நம்பு கேள்விப் பிரசண்ட நற்றவன். |
(இ
- ள்.) சம்புபத்தன் சதானந்தன் உத்தமன் - சம்புபத்தனும்
சதானந்தனும் உத்தமனும், அம்புயத்தன் அனைய மகோதரன் - தாமரை
மலரி லிருப்பவனாகிய அயயனை யொத்த மகோதரனும், உம்பர் அஞ்சிய
உக்கிர வீரியன் - தேவர்களும் அஞ்சப்பெற்ற உக்கிர வீரியனும், நம்பு
கேள்விப் பிரசண்ட நல் தவன் - விரும்புகின்ற கேள்வியினையுடைய
பிரசண்டன் என்னும் நல்ல தவத்தை யுடையவனும் எ - று.
சம்புபத்தன்
முதலியவை பெயர். (6)
ஆதி மாதவர்
யாவரு மண்புமை
பாதி யாய்முற்று மாகும் பராபரச்
சோதி பால்வைத்த சூதனைத் தோத்திரம்
ஓதி யஞ்சலித் தொன்று வினாவினார். |
(இ
- ள்.) ஆதி - முதலிய, மாதவர் யாவரும் - பெரிய
தவமுடையார் அனைவரும், உமைபாதியாய் - உமையொரு கூறாய், முற்றும்
ஆகும் - முழுதுமாகிய, பராபரச் சோதிபால் - பராபர ஒளிப்பிழம்பாகிய
இறைவனிடத்தில், அன்பு வைத்த சூதனை - அன்பு பூண்ட சூத முனிவனை,
தோத்திரம் ஓதி - துதித்து, அஞ்சலித்து - கைகூப்பி, ஒன்று வினாவினார் -
ஒன்று கேட்பாராயினர் எ - று.
மேற்
செய்யுளிற் கூறப்பட்டாருடன் இயைத்து 'ஆதி மாதவர்' என்றார்.
அன்புவைத்த எனக் கூட்டுக. உமையைத் தன்னுளடக்கித் தானேயாய் நிற்றல்
கருதி 'முற்றுமாகும்' என்றார். புறநானூற்றின்
கடவுள் வாழ்த்தில்,
"பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்" |
எனக் கூறப்பட்டிருத்தல்
காண்க.
"பாதியு மாய்முற்று மாயினார்க்குப்
பந்தமும் வீடு மாயினாருக்
காதியு மந்தமு மாயினாருக் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே" |
என்னும்
திருவாசகத்தையும்
சிந்திக்க. (7)
|