[கலிநிலைத்துறை]
|
வேத வாகம
புராணமே மிருதியே முதலா
ஓது நூல்களின் துணிபொரு ளுலகெலாம் பயந்த
பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய
போத மாதவ வுனக்கியாயம் புகல்வதொன் றுளதால். |
(இ
- ள்.) வேத ஆகம புராணமே மிருதியே முதலா - வேதங்கள்
ஆகமங்கள் புராணங்கள் மிருதிகள் முதலாக, ஓதும் நூல்களின் -
கூறப்பட்ட நூல்களின், துணிபொருள் - முடிந்த பொருள், உலகு எலாம்
பயந்த பேதை பாகனே பரம் - எல்லா வுலகங்களையும் ஈன்ற உமையை
ஒரு கூற்றிலுடைய சிவபிரானே பரம்பொருள் என்பது, எனத் தேர்ந்து
உணர் பெரிய - என ஆராய்ந்து உணர்ந்த பெரியவனே, போத மாதவ -
ஞானத்தையுடைய பெரிய தவத்தையுடையவனே, உனக்கு யாம் புகல்வது
ஒன்று உளது - உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உளது எ - று.
வேதம்,
புராணம், மிருதி முன் கூறப்பட்டன. சிவாகமம் காமிகம்
முதல் வாதுளம் இறுதியாக இருபத்தெட்டு என்ப. ஒன்பது ஆகமங்களின்
பெயர்களைத் திரமூலர் குறிக்கின்றார்; இதனை,
"பெற்றநல் லாகமங் காரணங் காமிகம்
உற்றநல் வீர முயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே" |
என்னும்
மந்திரத்திற் காண்க. பரமென்பது என விரிக்க.
புராணமே,
மிருதியே எம் ஏகாரங்கள் எண்ணுப் பொருளன; பிறவற்றொடுங் கூட்டுக.
"எண்ணே கார மிடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" |
என்பது தொல்காப்பியம்.
பேதை பாகனே என்னும் ஏகாரம் பிரிநிலையும்
தேற்றமுமாம். ஆல் : அசை. (8)
மேரு மந்தரங் கயிலபர்ப் பதமுதல் விடைமேல்
ஊரு மந்தர நாடவ னுறைபதி யனந்தம்
ஆரு மந்தமில் போகம்வீ டடைவதென் றவற்றின்
கார ணங்களோ டுரைத்தனை கருத்தினுக் கிசைய.
|
(இ
- ள்.) விடைமேல் ஊரும் - இடப வாகனத்திலேறி
நடத்தியருளுகின்ற, அந்தர நாடவன் - சிவலோகத்தை யுடையவனாகிய
இறைவன், உறைபதி - எழுந்தருளியிருக்குந் திருப்பதிகள் ஆகிய,மேரு
மந்தரம் கயிலை பர்ப்பதம் முதல் அனந்தம் - மேரு மந்தரம்
திருக்கயிலாயம் திருப்பருப்பதம் முதலிய அளவில்லாதனவும், ஆரும் -
எவரும், அந்தம் இல் - அழிவில்லாத, போகம்வீடு அடைவது என்று -
போகத்தையும் வீட்டையும் அடைவதற் குரியனவென்று, அவற்றின்
|